தமிழ்நாட்டில் நடந்த தீ விபத்தால் தத்தளிக்கும் ஹூண்டாய்... பிரம்மாண்ட ஆலை வெச்சி இருந்தும் ஒண்ணும் பண்ண முடியல!

இந்தியாவில் கார்கள் விற்பனை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் 40 ஆயிரத்திற்கும் கீழ் ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைந்துள்ளது.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த மாதத்தில் வெறும் 39 ஆயிரத்து 635 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 44 ஆயிரத்து 24 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்து 389 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

hyundai cars-wise sales report

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகமாக 8 ஆயிரத்து 202 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் 47 ஆயிரத்து 837 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்த்தால், ஒரே மாதத்தில் ஹூண்டாய் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், கடந்த மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கார்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை வழங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தாகும். இதன் காரணமாக, குறிப்பாக கிரெட்டா கார்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் மாடலாக கிரெட்டா முதலிடம் பிடித்து இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் வென்யூ முதலிடத்தை பிடித்துள்ளது.

hyundai cars-wise sales report

கடந்த மாதத்தில் விற்பனையான வென்யூ கார்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 776 ஆகும். கடந்த ஜூன் மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையான ஒரேயொரு ஹூண்டாய் கார், வென்யூ ஆகும். 2025 ஜூனில் வெறும் 6 ஆயிரத்து 858 வென்யூ கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூன் மாதத்தில் 3 ஆயிரத்து 918 வென்யூ கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மே மாதத்தில் 11 ஆயிரத்து 714 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் 938 வென்யூ கார்கள் கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வென்யூவுக்கு அடுத்து 2வது இடத்தில் எக்ஸ்டர் உள்ளது. எக்ஸ்டர் கார்களின் விற்பனையும் 38.84% அதிகரித்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் 5,873 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் 8,154 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில்தான் கிரெட்டா வருகிறது.

Hyundai Model Jun-26 Jun-25 Diff Growth % YoY
Venue 10,776 6,858 3,918 57.13
Exter 8,154 5,873 2,281 38.84
Creta / EV 7,168 15,786 -8,618 -54.59
Aura 5,977 5,413 564 10.42
i10 NIOS 4,865 4,237 628 14.82
i20 1,828 3,785 -1,957 -51.70
Verna 554 813 -259 -31.86
Alcazar 304 1,174 -870 -74.11
IONIQ 5 9 12 -3 -25.00
Tucson 0 73 -73 -100.00
Total 39,635 44,024 -4,389 -9.97

கடந்த மே மாதம் வரையில் சிறப்பாக விற்பனையாகி வந்த கிரெட்டாவின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 7 ஆயிரத்து 168 யூனிட்களாக பதிவாகி உள்ளது. கடந்த மே மாதத்தில் இதனை காட்டிலும் டபுள் மடங்கிற்கும் அதிகமாக சுமார் 15 ஆயிரத்து 235 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் 15 ஆயிரத்து 786 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த எண்ணிக்கைகளில் கிரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. இதற்கடுத்து இந்த வரிசையில் 4வது இடத்தில் அவ்ரா என்கிற செடான் வகையை சேர்ந்த கார் 5 ஆயிரத்து 977 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

Hyundai Model Jun-26 May-26 Diff Growth % MoM
Venue 10,776 11,714 -938 -8.01
Exter 8,154 6,595 1,559 23.64
Creta / EV 7,168 15,235 -8,067 -52.95
Aura 5,977 5,077 900 17.73
i10 NIOS 4,865 2,920 1,945 66.61
i20 1,828 4,749 -2,921 -61.51
Verna 554 723 -169 -23.37
Alcazar 304 814 -510 -62.65
IONIQ 5 9 10 -1 -10.00
Tucson 0 0 0
Total 39,635 47,837 -8,202 -17.15

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே மாதத்தில் கிரெட்டா கார்களின் விற்பனை பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவே நேரடியாக ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கையிலும் எதிரொலித்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் ஹூண்டாயின் இரு பெரும் தூண்களாக தற்சமயம் கிரெட்டா மற்றும் வென்யூ விளங்குகின்றன. இதில் ஒன்றின் விற்பனை பெரிதும் சரிவை கண்டிருப்பது நிச்சயமாக ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் வருத்தமாகவே இருக்கும்.

Article Corrections

ஹூண்டாய் நிறுவனத்தின் 2026 ஜூன் மாத கார்கள் விற்பனை எண்ணிக்கைகளை குறிப்பிடுவதில் ஏற்பட்ட தவறுகள் சரிச்செய்யப்பட்டன. மற்றும், தலைப்பு மாற்றப்பட்டது.
Article Published On: Saturday, July 11, 2026, 15:39 [IST]
English summary
Hyundai cars wise sales report of 2026 june venue exter creta aura
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out