பட்ஜெட் விலை ஹூண்டாய் கார்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு! ஆனாலும் டாடா, மஹிந்திராவை முந்த முடியல!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited - HMIL) 2026 ஜனவரியில் உள்நாட்டில் 59,107 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 9% வளர்ச்சியை காட்டுகிறது. எஸ்யூவி கார் மாடல்கள் தொடர்ந்து வலுவான விற்பனையை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் விலை குறைவான ஆரம்ப நிலை ஹூண்டாய் கார்கள் சற்றே மீட்சி பெற்றுள்ளன.
ஆனால், சில உயர் ரக ஹூண்டாய் கார் மாடல்களின் விற்பனை சரிவைச் சந்தித்து வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா (Creta) கடந்த ஜனவரி மாதத்தில் 17,921 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியை விட 3% சரிவு ஆகும். ஹூண்டாய் வென்யூ (Venue), 12,413 யூனிட்கள் விற்பனையுடன் 2025 ஜனவரியை விட 12% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவின் தொடர்ச்சியான ஆதிக்கத்தையும், புதிய தலைமுறை மாடலுக்குக் கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது. கிரெட்டாவை விலை அதிகமாகவோ அல்லது பெரியதாகவோ கருதும் வாடிக்கையாளர்கள், வென்யூவின் அதிக என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் நவீன அம்சங்களின் காரணமாக அதை நாடுகின்றனர்.
ஹூண்டாய் அவ்ரா, விற்பனையில் மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் 5,388 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 2026 ஜனவரியில் 7,978 யூனிட்கள் விற்கப்பட்டு 48% விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவின் மிகவும் மலிவு விலையிலான ஹூண்டாய் காரான கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) கார் மாடலும் இதேபோன்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது 2025 ஜனவரியை விட 45% வளர்ச்சியுடன் 7,710 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விலை உணர்வுள்ள வாடிக்கையாளர்கள் பெட்ரோல் செடான் மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல்களுக்குத் திரும்புவதும், டாக்சி மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான தேவை அதிகரிப்பும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.
ஹூண்டாய் ஐ20 (i20) மாடல் 5,677 யூனிட்கள் விற்கப்பட்டு 2025 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) ஆறாவது இடத்திற்கு சரிந்து, கடந்த மாதத்தில் 5,621 யூனிட்கள் (முந்தைய ஆண்டு 6,068 யூனிட்கள்) மட்டுமே விற்கப்பட்டு 7% சரிவைக் கண்டுள்ளது.

ஹூண்டாயின் மூன்று இருக்கை வரிசை எஸ்யூவி காரான அல்கசார் (Alcazar), 2025 ஜனவரியின் 1,310 யூனிட்களுக்கு எதிராக கடந்த ஜனவரியில் 962 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து, 27% சரிவைச் சந்தித்துள்ளது. விரைவில் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் பெறவுள்ள வெர்னா மாடல், 1,477 யூனிட்களுக்கு பதிலாக 823 யூனிட்கள் விற்பனை உடன், 44% குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஐயோனிக் 5 (Ioniq 5) எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் கார் இரண்டு யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
| Model | Jan 2026 Sales | Jan 2025 Sales | YoY Change |
|---|---|---|---|
| Creta | 17,921 | 18,522 | -3% |
| Venue | 12,413 | 11,106 | 12% |
| Aura | 7,978 | 5,388 | 48% |
| Grand i10 | 7,710 | 5,311 | 45% |
| i20 Elite | 5,677 | 4,741 | 20% |
| Exter | 5,621 | 6,068 | -7% |
| Alcazar | 962 | 1,310 | -27% |
| Verna | 823 | 1,477 | -44% |
| Ioniq 5 | 2 | 16 | -88% |
| Tucson | 0 | 64 | -100% |
| Kona | – | – | 0% |
| TOTAL | 59,107 | 54,003 | 9% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐயோனிக் 5 போன்ற விலையுயர்ந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதால், ஹூண்டாய் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறிய எலெக்ட்ரிக் கார்கள் உட்படப் பல புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2026 ஜனவரி மாத கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் முந்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









