ரூ.1.5 - 2 லட்சம் கூடுதலாக செலவு செய்தால் சூப்பரான ஹோண்டா கார்! கொடுக்கும் பணத்துக்கு இது ரொம்ப அதிகம்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சிட்டி கார் SV, V, ZX, ZX+ என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சிட்டி காருக்கு வழக்கம்போல் ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் போட்டியாக விளங்குகின்றன. இந்த கார்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு அவற்றின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை தேர்வு செய்யலாம். காரின் ஆரம்ப விலையாக எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டின் விலை இருக்கும்.

hyundai city facelift base variant

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களான ஸ்லாவியா கிளாசிக், விர்டுஸ் கம்ஃபர்ட்லைன் உடன் ஒப்பிடுகையில் புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் எண்ட்ரி-லெவல் SV வேரியண்ட்டில் நிறைய அம்சங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெரிய தொடுத்திரை: சிட்டி SV வேரியண்ட்டில் 8 இன்ச்சில் தொடுத்திரையை இன்ஃபோடெயின்மெண்ட் திரையாக ஹோண்டா வழங்கியுள்ளது. ஆனால், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் சற்று சிறியதாக 7 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை வழங்கப்படுகிறது.

hyundai city facelift base variant

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி: வயர் இல்லாமல் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களுடன் காரை இணைக்கும் வசதி புதிய சிட்டி காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், ஸ்லாவியா மற்றும் விர்டுஸ் கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் இது கிடைப்பது இல்லை.

பின்பக்கத்தில் பார்க்கிங் கேமரா: ஸ்லாவியா, விர்டுஸ் கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் வழங்கப்படாமல் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் வழங்கப்படும் மற்றொரு அம்சம் இதுவாகும். ரிவர்ஸில் காரை பார்க் செய்வதற்கு உதவியாக கேமரா வழங்கப்பட்டு, அதன் காட்சிகள் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் காட்டப்படுகின்றன. ஸ்லாவியா, விர்டுஸ் கார்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்: காருக்குள் தட்ப வெப்ப நிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் ஆட்டோமேட்டிக்காக வைத்திருக்க உதவுவது, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகும். இது ஸ்லாவியா, விர்டுஸ் கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் மேனுவலாக செயல்படும் வகையில் வழங்கப்படும் நிலையில், சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் SV வேரியண்ட்டில் முழுவதும் ஆட்டோமேட்டிக் ஆனதாக வழங்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி: ஸ்லாவியா, விர்டுஸ் கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் முன் இருக்கைகளுக்கு எதிரே மட்டுமே ஏசி காற்றுத்துளைகள் வழங்கப்படும் நிலையில், சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் பின் வரிசை இருக்கைகளில் அமர்பவர்களுக்காக பிரத்யேகமாக ஏசி வெண்ட்களை அனைத்து வேரியண்ட்களிலும் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளை எலெக்ட்ரிக் பவர் மூலமாக மடக்கும் வசதி போன்றவற்றையும் சிட்டி SV வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும். ஆனால் இதற்கேற்ப ஸ்லாவியா ஆரம்ப விலையை காட்டிலும் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.2 லட்சமும், விர்டுஸின் ஆரம்ப விலையை விட ரூ.1.50 லட்சமும் அதிகமாக உள்ளது.

Article Published On: Wednesday, May 27, 2026, 6:14 [IST]
English summary
Hyundai city facelift base variant better equipped than skoda slavia and volkswagen virtus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out