இந்தியாவில் 15 லட்சம் விற்பனையை கடந்த ஹூண்டாய் கிரெட்டா.. ஏற்றுமதியிலும் புதிய மைல்கல்!

எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், இதுவரை உள்நாட்டு சந்தையில் 15 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. குடும்ப பயன்பாடு, நவீன வசதிகள் மற்றும் பல்வேறு எஞ்சின் தேர்வுகள் ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள விற்பனைத் தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை கிரெட்டா காரின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை 15,12,036 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் இதுவரை விற்பனை செய்துள்ள மொத்த பயணிகள் கார்களில் கிரெட்டா மட்டும் சுமார் 15 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கிரெட்டா அறிமுகமானதில் இருந்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த எஸ்யூவி விற்பனையில் சுமார் 55 சதவீத பங்களிப்பையும் இந்த கார் பெற்றுள்ளது.

Hyundai Creta

விற்பனை தொடர்ந்து உயர்வு

கிரெட்டா காரின் விற்பனை வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் 1,62,773 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், 2024-25ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,94,871 யூனிட்டுகளாக உயர்ந்தது. 2025-26ம் நிதியாண்டில் 2,01,921 யூனிட்டுகள் விற்பனையாகி, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையை கிரெட்டா பதிவு செய்துள்ளது.

Also Read

கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிரெட்டா மாடலும், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமான கிரெட்டா எலெக்ட்ரிக் (Creta Electric) காரும் இணைந்து, 2026ம் ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 5.3 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.

Hyundai Creta

ஏற்றுமதியிலும் அசத்தல்

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளிலும் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை இந்த காரின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2,95,994 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விரைவில் 3 லட்சம் ஏற்றுமதி என்ற மைல்கல்லையும் கிரெட்டா எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

எரிபொருள் தேர்வுகள்

தற்போது கிரெட்டா பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு தேர்வுகளில் கிடைக்கிறது. வழக்கமான கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன. இந்தியாவில் கிரெட்டா காரின் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10.91 லட்சம் முதல் ரூ.20.14 லட்சம் வரை உள்ளது.

விரைவில் புதிய தலைமுறை கிரெட்டா

இதற்கிடையே, ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை கிரெட்டா காரை வரும் 2027ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை மாடலில் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

இந்தியாவில் நடுத்தர ரக எஸ்யூவி சந்தையில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், சந்தைப் போட்டியை சமாளித்து 15 லட்சம் உள்நாட்டு விற்பனை என்ற மைல்கல் கிரெட்டா கார் பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள், எரிபொருள் தேர்வு மற்றும் சரியான விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறது.

Article Published On: Friday, October 16, 2026, 16:59 [IST]
English summary
Hyundai creta 15 lakh sales milestone india
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out