கிரெட்டா எஸ்யூவியில் இதுவரை யாரும் பார்க்காத வசதியைக் கொடுக்கும் ஹூண்டாய்.. அது என்ன வசதின்னு தெரியுமா?
இந்தியாவில் ஹூண்டாயின் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இரண்டாம் தலைமுறை கிரெட்டா எஸ்யூவி தற்போது இருந்து வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது ஹூண்டாய். மூன்றாம் தலைமுறையாக அப்டேட் செய்யப்படவிருக்கும் புதிய கிரெட்டா எஸ்யூவி குறித்த தகவல்கள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் புதிய கிரெட்டாவில் ஹூண்டாய் கொடுக்கவிருக்கும் புதிய வசதி ஒன்று இதுவரை நாம் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. பார்க்காத ஒன்று என்றால் 20 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலை கொண்ட மாஸ் மார்க்கெட் கார்களில் இப்படியான வசதியை வேறெந்த நிறுவனமும் இதுவரை கொடுக்கவில்லை என்பது தான். 'பிளியோஸ் கனெக்ட்' (Pleos Connect) என்ற புதிய வசதியை மூன்றாம் தலைமுறை கிரெட்டாவில் கொடுக்கவிருக்கிறது ஹூண்டாய்.

இதனை தென் கொரியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் புதிய கிராண்டியூர் மற்றும் ஐரோப்பாவில் அதன் அயானிக் 3 ஆகிய கார்களில் ஹூண்டாய் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக கிரெட்டா எஸ்யூவியிலேயே பிளேயோஸ் கனெக்ட் என்ற இந்தப் புதிய வசதியை ஹூண்டாய் கொடுக்கவிருக்கிறது. இது என்ன வசதி, இது வாடிக்கையாளர்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இப்போது கொஞ்சம் ப்ரீமியமான கார்களின் டேஷ்போர்டை டிஸ்பிளேக்களால் நிறைப்பதை நிறுவனங்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன. ஹூண்டாயும் அதே பாதையில் பயணித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக மினிமலிஸ்டிக்கான, ஆனால் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஒரு பாதையில் பயணிக்க ஹூண்டாய் முடிவெடுத்திருக்கிறது. அதன் முடிவு தான் இந்த பிளியோஸ் கனெக்ட் வசதி.

நிறைய ஸ்கிரீன்களை டேஷ்போர்டில் கொடுப்பதற்கு பதிலாக ஒரேயொரு டிஸ்பிளே மட்டும் டேஷ்போர்டின் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பாஸஞ்சர் டிஸ்பிளே என அனைத்துமாக இந்த ஒரே ஒரு திரையே செயல்படும். கார் ஓட்டும் போது விதவிதமான திரைகளால் கவனத்தை சிதறடிக்காமல், ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் கொடுப்பது என்பது தான இந்த பிளியோஸ் கனெக்ட் அம்சத்தின் அடிப்படையான திட்டம்.
வெறும் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் டிஜிட்டல் டிஸ்பிளேவிற்கு மட்டும் மாற்றாக இந்த பிளியோஸ் கனெக்ட் சிஸ்டத்தை ஹூண்டாய் கொடுக்கவில்லை. மாறாக மெக்கானிக்கலாக இருக்கும் காரை SDV-யாக அதாவது சாஃப்ட்வேர் டிஃபைன்டு வெஹிக்கிளாக மாற்றுகிறது இந்த அம்சம். ஒரு காரில் இருக்கும் அனைத்து விதமான சாஃப்ட்வேர் அம்சங்களையும், ஸ்மார்ட் அம்சங்களையும் இந்த ஒரேஒரு திரை மூலமாகவே டிரைவரால் இயக்க முடியும்.
காரின் ஸ்பீடு மற்றும் RPM-யை ஸ்பிளிட் ஸ்கிரீன் செட்டப் மூலமாக திரையில் ஒரு பாதியில் தெரிய வைக்கலாம். நேவிகேஷனை திரையின் ஒரு ஓரத்திற்குக் கொண்டு வரலாம். மியூசிக் கண்ட்ரோல் மற்றும் பிற அம்சங்களை திரையில் ஒரு ஓரத்தில் பயன்படுத்தலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் கூட செய்ய முடியும். அந்த அளவிற்கு பெரிதாகவே இந்த ஒரு திரையை ஹூண்டாய் கொடுக்கிறது.
இந்தத் திரையை ஸ்மார்ட்போனுடன் இணைக்கத் தேவையில்லை. இந்தத் திரையே ஒரு ஸ்மார்ட்போன் போல தன்னிச்சையாக செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளியோ AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியையும் இந்த பிளியோ கனெக்ட் அம்சத்தில் கொடுத்து வருகிறது ஹூண்டாய். இதனால் AI மூலமாகவே நிறைய செயல்பாடுகளை இதில் செய்ய முடியுமாம்.
இறுதியாக பிளியோஸ் ID என்ற பெர்சனல் ப்ரொபைல் வசதியும் பிளியோஸ் கனெக்ட் அம்சத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் காரின் சீட்டிங் அட்ஜஸ்ட்மென்ட், மிரர் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட டேட்டாவையும் நம்முடைய பெர்சனல் பிளோயோ ப்ரொஃபைலாக வைத்துக் கொள்ள முடியும். காரில் ஏறியவுடன் நம்முடைய பெர்சனல் ஃப்ரொபைலை ஆக்டிவேட் செய்தால், சீட்டிங் அட்ஜஸ்ட்மென்ட், மிரர் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் நமக்கு ஏற்ற வகையில் மாறிவிடும்.
இத்தனையையும் சேர்ந்ததைத் தான் பிளியோஸ் கனெக்ட் என அழைக்கிறது ஹூண்டாய். வெளிநாடுகளில் மேலே கூறிய கார் மாடல்களில் ஏற்கனவே இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கிரெட்டாவில் இந்த அனைத்து வசதிகளும் வழங்கப்படுமா அல்லது பிளியோஸ் கனெக்ட் அம்சத்தில் குறிப்பிட்ட வசதிகளை மட்டும் ஹோண்டா கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேட்பதற்கு பிளியோஸ் கனெக்ட் என்ற இந்த வசதி சுவாரஸ்யமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் முழுவதுமாக சாஃப்ட்வேரால் செயல்படும் அளவிற்கு கிரெட்டா இருக்கிறது. மேலே கூறியது அனைத்து அம்சங்களும் கிரெட்டாவில் கொடுக்கப்படுமா என்பது தான் இப்போதையே கேள்வி. மேலும் இதனைக் கேட்கும் போதே தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட அம்சம் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே உயர்நிலை வேரியன்ட்களில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications