காருக்குள்ளேயே தியேட்டர் அனுபவம்... ஹூண்டாய் க்ரெட்டா, அல்காஸர் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான கிரெட்டா, கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் அல்காஸர் எஸ்யூவி மாடல்களின் புதிய லவுஞ்ச் எடிசன் (Lounge Edition) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று கார்களின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளின் அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய எடிஷன் மாடல்களில் தோற்றம், இன்டீரியர் மற்றும் பின்புற பயணிகளுக்கான பொழுதுபோக்கு வசதிகளில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

புதிய லவுஞ்ச் எடிசன் மாடல்களுக்கு கோல்டன் பிரான்ஸ் என்ற புதிய வெளிப்புற வண்ணத் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில் கார்னிஷ், பின்புற ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்கள் மற்றும் ரியர் வியூ மிரர்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன. கருப்பு வண்ணப் பூச்சுடன் கூடிய சக்கரங்களும் இந்த சிறப்பு பதிப்பின் தோற்றத்தை மேலும் தனித்துவமாக காட்டுகின்றன.

Hyundai Lounge Edition

புதிய பொழுதுபோக்கு வசதி

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் முக்கிய சிறப்பம்சமாக, பின்புற பயணிகள் பயன்படுத்தும் வகையில் 11.6 அங்குல திரையுடன் கூடிய என்டெர்டெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், OTT தளங்களின் வீடியோக்களை பார்ப்பது, வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ கேம்ஸ் விளையாடுவது மற்றும் மொபைல் போனை மிரர் செய்யும் வசதிகளை பெற்றுள்ளது.

Also Read

இந்த திரை அமைப்பு ஏற்கனவே உள்ள 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரிமீயம் ஆடியோ சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களில் பின்புற இருக்கைகளில் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு இது கூடுதல் வசதியையும், பயணத்தை அலுப்பில்லாமல் மாற்றுவதற்கும் உதவியாக இருக்கும்.

மூன்று மாடல்களின் லவுஞ்ச் எடிசன் மாடலில் புதிய இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டிசைன் இருக்கைகள், லவுஞ்ச் பிராண்டு பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

Also Read

கிரெட்டா லவுஞ்ச் எடிசன்

கிரெட்டா லவுஞ்ச் எடிசன் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஐடிவி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. கிரெட்டா லவுஞ்ச் எடிசன் மாடலானது ரூ.19.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

அல்காஸர் லவுஞ்ச் எடிசன் மாடலானது 5 இருக்கை அமைப்பு கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிறப்புப் பதிப்பு மாடலில் இந்த 5 சீட்டர் வெர்ஷனை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. இதனால், பின்புற பயணிகளுக்கு அதிக இடவசதி கிடைப்பதுடன், பொருட்கள் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதியும் தாரளமாக மாறி இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படுகிறது. ரூ.21.80 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும்.

கிரெட்டா எலெக்ட்ரிக் லவுஞ்ச் எடிசன்

எலக்ட்ரிக் எஸ்யூவி வாங்க விரும்புபவர்களை கவரும் வகையில் ஹூண்டாய் இந்த புதிய எடிஷனை கொண்டு வந்துள்ளது. கிரெட்டா லவுஞ்ச் எடிசன் மாடலானது 51.4 kWh பேட்டரியுடன் கூடிய நீண்ட ரேஞ்ச் (LR) பதிப்புகளில் கிடைக்கும். இதன் 51.4 kWh பேட்டரி பதிப்பு அதிகாரப்பூர்வமாக 510 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் ரூ.24.34 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது.

இந்த புதிய லவுஞ்ச் எடிசன் மாடல்கள் மூலம் ஹூண்டாய் ஏற்கனவே பிரபலமாக உள்ள கிரெட்டா மற்றும் அல்காஸர் எஸ்யூவி குடும்பத்திற்கு கூடுதல் பிரீமியம் அம்சங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பின்புற பயணிகளுக்கான பெரிய பொழுதுபோக்கு திரை, போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் பிரத்யேக இன்டீரியர் ஆகியவை இந்த எடிஷன்களின் தனித்துவமான அம்சங்களாக இருக்கின்றன.

Article Published On: Thursday, September 10, 2026, 13:49 [IST]
English summary
Hyundai creta alcazar creta electric lounge edition launched price features india
மேலும்... #hyundai #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out