தமிழ்நாடு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சோகம்! டாப் 10 பட்டியலில் இருந்து காணாமல் போன பிரபலமான கார்!

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars June 2026) தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதல் இடத்தை டாடா பன்ச் (Tata Punch) காரும், 2வது இடத்தை டாடா நெக்ஸான் (Tata Nexon) காரும் பிடித்துள்ளன. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவை.

3வது, 4வது மற்றும் 5வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகியவை பிடித்துள்ளன. இவை முறையே செடான் (Sedan), ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தவை.

Hyundai Creta

6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Fronx), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpiot) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ராக்ன்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகியவை உள்ளன. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரானது, ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. மற்ற இரண்டும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை.

9வது மற்றும் 10வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகியவை உள்ளன. இவை முறையே ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. அதேபோல் இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலும் (Top 10 SUVs June 2026) வெளியாகியுள்ளது.

Hyundai Creta Electric

இதில், முதல் 5 இடங்களில் முறையே டாடா பன்ச், டாடா நெக்ஸான், மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், ஹூண்டாய் வெனியூ உள்ளன. அதற்கடுத்த 5 இடங்களில் முறையே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா செல்டோஸ் (Kia Seltos), மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7X0) இருக்கின்றன.

இந்த 2 பட்டியலையும் சற்று உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். 2 பட்டியல்களிலுமே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) இல்லை என்பதுதான் அது. எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார் ஒவ்வொரு மாதமும் தவறாமல் இந்த 2 பட்டியல்களிலும் இடம் பிடித்து விடும்.

ஒரு சில மாதங்களில் இந்த 2 பட்டியல்களிலும், ஹூண்டாய் க்ரெட்டாதான் முதல் இடத்தில் இருக்கும். ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த பட்டியலில் இடம்பெறவே ஹூண்டாய் க்ரெட்டா தவறி விட்டது. ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தியில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட இடையூறுதான் இதற்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதாவது தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள மொபிஸ் இந்தியா (Mobis India) தொழிற்சாலையில் கடந்த மே 31ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இங்கிருந்துதான் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஆடியோ பாகங்கள் மற்றும் வேறு சில முக்கியமான பாகங்கள் எல்லாம் சப்ளை ஆகி கொண்டிருந்தன. ஆனால் தீ விபத்து காரணமாக இந்த சப்ளை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 15,785 க்ரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 7,168 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது இம்முறை 8,617 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 54.59 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், ஹூண்டாய் க்ரெட்டா மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 15,235 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஜூன் மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 7,168 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால் 8,067 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 52.95 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சனை கடந்த ஜூன் 22ம் தேதி சரி செய்யப்பட்டு விட்டது. சப்ளையில் பாதிப்பு ஏற்பட்ட பாகங்களை வேறு இடத்தில் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளை ஹூண்டாய் நிறுவனம் செய்துள்ளது. எனவே வரும் மாதங்களில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தி மீண்டும் அதிகரித்து, விற்பனை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10,90,700 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20,11,300 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா காரின் செயல்திறன் மிக்க வெர்ஷன், ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் (N Line) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19,03,300 ரூபாயாக இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20,09,900 ரூபாயாக உள்ளது. இது மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷனையும் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18,02,800 ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24,70,100 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான் ஹூண்டாய் க்ரெட்டா விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. தற்போது அதன் விற்பனையில் ஏற்பட்டிருப்பது தீ விபத்து காரணமாக உருவான தற்காலிக சரிவுதான். கூடிய விரைவிலேயே ஹூண்டாய் க்ரெட்டா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது உறுதி.

Article Published On: Saturday, July 4, 2026, 18:48 [IST]
English summary
Hyundai creta sales down 55 per cent in june 2026 due to production disruptions
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out