இன்று அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் காருக்கு போட்டியாக புதிய ஹூண்டாய் கார்! விலையை கேட்டால் உடனே புக்கிங் போடுவீங்க!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பிரபலமான கிரெட்டா (Creta) காரில் புதியதாக 'சம்மர் எடிஷன்' (Summer Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.12.06 லட்சத்தில் கிரெட்டாவின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சம்மர் எடிஷன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களை கவர்ந்து கார்களின் விற்பனையை அதிகரிக்க, ஸ்பெஷல் எடிஷன்களை கார் நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்வது வழக்கம். குறிப்பாக, தீபாவளி (Diwali), தசரா (Dussehra) போன்ற பண்டிகை காலங்களில் அவ்வாறான ஸ்பெஷல் எடிஷன் கார்களின் அறிமுகங்களை அதிகமாக பார்க்க முடியும். அதேபோல், கோடை காலத்திலும் கார்களின் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம் செய்யப்படுவது உண்டு.

hyundai creta summer edition launched

ஏனெனில், கோடை விடுமுறை சமயத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதன் கிரெட்டா எஸ்யூவி காரில் புதியதாக சம்மர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறான ஸ்பெஷல் எடிஷன்கள் பெரும்பாலும் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மட்டுமே மாற்றங்களுடன் கொண்டுவரப்படும்.

அந்த வகையில், புதிய கிரெட்டா சம்மர் எடிஷனும் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் மட்டுமே வேறுப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. என்ஜின் & கியர்பாக்ஸ் உள்ளிட்ட மெக்கானிக்கல் பாகங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. ஹூண்டாய் கிரெட்டா காரின் இஎக்ஸ், இஎக்ஸ் (ஆப்ஷ்னல்), எஸ் (ஆப்ஷ்னல்), எஸ் (ஆப்ஷ்னல்) நைட், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் பிரீமியம் வேரியண்ட்களில் புதிய சம்மர் எடிஷன் கிடைக்கும்.

hyundai creta summer edition launched

கிரெட்டாவின் இந்த ஸ்பெஷல் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.12.06 லட்சத்தில் இருந்து ரூ.17.89 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேரியண்ட்களை பொறுத்து காரில் வசதிகள் கிடைக்கும். கிரெட்டா சம்மர் எடிஷனின் இஎக்ஸ் வேரியண்ட் விலை குறைவானதாக இருப்பினும் அதில் ஸ்மார்ட் சாவி மற்றும் காரை ஸ்டார்ட் செய்வதற்கு பொத்தான் உள்ளிட்டவற்றை பெறலாம்.

அதுவே, இதற்கடுத்த நிலையில் உள்ள இஎக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் கூடுதலாக குவாட்-பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள், பின்பக்க விண்ட்ஷீல்டிற்கான சன்ஷேட்கள் மற்றும் பின்பக்கத்தில் கேமரா உள்ளிட்டவற்றை பெறலாம். சம்மர் எடிஷனின் எஸ் (ஆப்ஷ்னல்), எஸ் (ஆப்ஷ்னல்) நைட் வேரியண்ட்கள் கூடுதலாக டாஷ்கேம் உடன் கிடைக்கும்.

இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள எஸ்.எக்ஸ் வேரியண்ட் 10.25 இன்ச்சில் அளவில் பெரியதான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை உடன் கிடைக்கும். டாப் வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் பிரீமியமில் சரவுண்ட்-வியூ கேமரா, பிளைண்ட்-ஸ்பாட் வியூ மானிடர் மற்றும் முன்பக்கத்தில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா கார் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்தாலும், புதிய சம்மர் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என்கிற இரு என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேரியண்ட்டை பொறுத்து மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி (IVT) அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான கஸ்டமர்களுடன், வருடத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகக் கூடியதாக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. இந்த அளவிற்கு இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவதற்கு காரணம், இவ்வாறு ஸ்பெஷல் எடிஷன்களை ஹூண்டாய் நிறுவனம் அவ்வப்போது அறிமுகம் செய்வது ஆகும். இதனால், புதிய சம்மர் எடிஷனின் அறிமுகத்தினால் வரும் மாதங்களில் கிரெட்டாவின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 16:57 [IST]
English summary
Hyundai creta summer edition launched in india price features engine all details here
மேலும்... #hyundai #creta #new launches #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+