இந்த கம்பெனியில நம்பர் 1 இடத்துல விற்பனையாகும் கார் இது தான்! எவ்வளவு பேர் வாங்கியிருக்காங்க தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் அந்நிறுவனத்தின் நம்பர் ஒன் காராக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் வென்யூ விற்பனையை பெண்ணுக்கு தள்ளி இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 59,107 கார்களை கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையை ஒப்பிடும்போது 9.5 சதவீதமும் கடந்த டிசம்பர் மாத விற்பனை ஒப்பிடும் போது 39.4% அதிகமாகும்.

இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் இந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் 17,921 கார்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் 18,522 கார்கள் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது விற்பனை குறைவு தான் என்றாலும் பெரிய அளவில் குறைவாக இல்லை வெறும் 3.24 சதவீதம் தான் விற்பனை குறைந்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 கார்களில் இந்த கார் ஒன்றாக இருக்கிறது. இதில் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய ஆப்ஷன் உள்ளன. மிட் சைஸ் செக்மெண்டில் இந்த கார் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்றே சொல்லலாம். இந்த கார் ரூபாய் 10.72 லட்சம் முதல் ரூபாய் 20.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

இதுபோக 1.5லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ர் போல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ சார்ஜடு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதுபோக இந்த காரில் சமீபத்தில் தான் இவி ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் கிரெட்டா காரின் உட்பகுதியில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் வாய்ஸ் மூலம் இயக்கக்கூடிய பானரோமிக் சன் ரூஃப் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 70 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. முக்கியமாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ள இதன் காரணமாகவே இந்த கார் விற்பனை சிறப்பாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கு வடிவமைப்பு மைலேஜ் இன்ஜின் ஆப்ஸ்கள் மற்றும் நம்பகத்தன்மை முக்கியமான காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இந்த கார் நல்ல விற்பனையில் இருக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








