முதல்முறையா கார் வாங்குபவர்கள் அதிகம் தேர்வு செய்யும் ஹூண்டாய் கார்... கஸ்டமர்களுக்காக புதிய அதிரடி மாற்றங்கள்

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு தற்போதைக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகும் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கிரெட்டா விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அவ்வப்போது கிரெட்டா காரில் புதிய அப்கிரேட்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருகிறது.

அந்த வகையில் தற்போது, கிரெட்டாவின் இரு வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அவையாவன, எஸ்.எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX (O)) ஆகும். இந்த இரு வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தத்தால், கிரெட்டா காரின் வேரியண்ட்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

hyundai creta variants delisted

கிரெட்டா காரை இனி இ, இ.எக்ஸ், இஎக்ஸ் (ஆப்ஷ்னல்), எஸ் (ஆப்ஷ்னல்), எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் பிரீமியம் மற்றும் கிங் ஆகிய வேரியண்ட்களில் மட்டுமே வாங்க முடியும். விற்பனை நிறுத்தப்பட்டுள்ள எஸ்.எக்ஸ் டெக் வேரியண்ட்டை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இது கிரெட்டாவின் மிட்-லெவல் வேரியண்ட் ஆகும். குறைந்த விலையில் அடாஸ் (ADAS) வசதியை இந்த வேரியண்ட் வழங்கி வந்தது.

அதாவது, கிரெட்டா காரை அடாஸ் உடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது இந்த எஸ்.எக்ஸ் டெக் வேரியண்ட்டை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இந்த வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், கிரெட்டாவில் அடாஸ் வசதிகளை பெற விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டான கிங் வேரியண்ட்டை வாங்க வேண்டும். அதன் விலை ரூ.1.48 லட்சம் அளவிற்கு அதிகமாக உள்ளது.

hyundai creta variants delisted

மிட்-லெவல் எஸ்.எக்ஸ் டெக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.15.69 லட்சம் மற்றும் ரூ.17.22 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. கிரெட்டாவில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள மற்றொரு வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) ஆனது 2024ஆம் ஆண்டில் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Creta Facelift) கார் அறிமுகம் செய்யப்பட்ட போது டாப் வேரியண்ட்டாக இருந்தது.

அதன்பின்பே கடந்த 2025ஆம் ஆண்டில் கிரெட்டா கிங் (King) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டாவில் அனைத்து விதமான என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் ஒரேயொரு வேரியண்ட் கிங் மட்டுமே ஆகும். இந்த வேரியண்ட்டில் பெட்ரோல் என்ஜினை மேனுவல் மற்றும் சிவிடி (CVT) என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் வாங்கலாம்.

அதேபோல், டீசல் என்ஜினை கிரெட்டா கிங் காரில் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் வாங்கலாம். மேலும், டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது கிரெட்டாவில் கிங் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் ஆப்ஷனை மட்டும் தவிர்த்து, மற்ற அனைத்து என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிரெட்டாவின் இ (ஆப்ஷ்னல்) மற்றும் எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களை பெறலாம்.

அதுவே, கிரெட்டாவில் குறைந்த விலையில் கிடைக்கும் இ வேரியண்ட் ஆனது பெட்ரோல் மேனுவல் மற்றும் டீசல் மேனுவல் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. அவற்றின் விலைகள் என்ன? கிரெட்டாவின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் என்னென்ன? அவற்றை எந்தெந்த என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெறலாம் என்பதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Variants Petrol MT Petrol CVT Diesel MT Diesel AT Turbo-petrol DCT
E ₹10.79 lakh - ₹12.40 lakh - -
EX ₹12.05 lakh - ₹13.61 lakh - -
EX(O) ₹13.13 lakh ₹14.48 lakh ₹14.69 lakh ₹16.04 lakh -
S(O) ₹14.19 lakh ₹15.64 lakh ₹15.80 lakh ₹17.25 lakh -
SX ₹15.03 lakh - - - -
SX Premium ₹16.33 lakh ₹17.77 lakh ₹17.88 lakh - -
King ₹17.27 lakh ₹18.68 lakh ₹18.94 lakh ₹19.86 lakh ₹19.90 lakh

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் கிரெட்டாவில் இரு வேரியண்ட்களின் விற்பனையை ஹூண்டாய் நிறுத்தியதற்கு நிச்சயமாக காரணங்கள் இருக்கும். மற்ற வேரியண்ட்களின் விற்பனையை அவை பாதிப்பதாக அல்லது தேவையற்ற வேரியண்ட்களாக ஹூண்டாய் கருதியதால் இந்த விற்பனை நிறுத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கலாம். அல்லது, இந்த வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி, அவற்றின் இடத்தில் புதிய வேரியண்ட்களை ஹூண்டாய் அறிமுகம் செய்யலாம். ஒட்டுமொத்தத்தில், கிரெட்டாவின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.79 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.19.90 லட்சம் வரையில் உள்ளன.

Article Published On: Thursday, May 7, 2026, 23:39 [IST]
English summary
Hyundai creta sx tech and sx optional variants delisted in india check all details here
மேலும்... #hyundai #hyundai creta #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+