டாடா நெக்ஸான் இவி மார்க்கெட்டை மொத்த முடிக்க வரும் ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார்! 10 லட்ச ரூபாய்க்குள்...
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில் புதியதாக எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்னும் பெயரிடப்படாத அந்த கார் தொடர்ச்சியாக பொது வெளியில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் அந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த முறை இந்தியாவில் எந்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றால், சண்டிகரில் ஆகும். அங்கு சார்ஜிங் நிலையம் ஒன்றில், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டு சார்ஜ் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் 'கார்எச்பி.இன்' (Carhp.in) என்கிற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் இவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதால், இந்த படங்களில் அது எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்பட்ட நிலையில் இல்லை. ஆனால், ஹூண்டாயின் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் தோற்றம் இன்னும் வெளியிடப்படாததால், மறைக்கப்பட்ட நிலையில் காட்சி தந்துள்ளது. இருப்பினும், இந்த படங்களில் காட்சித்தரும் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
பொதுவாக, சிவப்பு நிற நம்பர் பிளேட் ஆனது டீலர்ஷிப் ஷோரூம்களின் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக வழங்கப்படுவது ஆகும். ஆதலால், இந்த குறிப்பிட்ட வெள்ளை நிறத்திலான நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் ஆனது ஷோரூம் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட போது சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையத்தில் நெக்ஸான் இவி மற்றும் ஹூண்டாயின் புதிய ச்ப்-4 மீட்டர் எஸ்யூவி ஆகிய இரண்டும் அருகருகே நிறுத்தப்பட்டுள்ளதால், சில முக்கியமான விஷயங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன.

அவற்றுள் முக்கியமானது, இந்த இரு எலெக்ட்ரிக் கார்களும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தோற்றத்தை கொண்டிருப்பது ஆகும். இதில், ஹூண்டாயில் இருந்து புதியதாக அறிமுகமாகும் இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் என்னென்ன மாதிரியான புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த போகிறோம் என்பதை ஹூண்டாய் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அவற்றுள் இந்த புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரும் ஒன்றாகும். இந்தியாவில் ஹூண்டாயின் தற்போதைய புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களான வென்யூ (Venue) மற்றும் எக்ஸ்டர் (Exter) கார்களை போன்று இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் பெட்டகம் வடிவிலான நிமிர்ந்த தோற்றம் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் இந்த புதிய ஹூண்டாய் காரின் பின்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பக்கத்தில் விண்ட்ஷீல்டு, மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கூர்மையான வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் மற்றும் கேமராவையும் இந்த எலெக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது.
தட்டையான இந்த காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகளின் ஃபிரேம்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நியூ ஜென்ரேஷன் வென்யூ காரை போன்று வளைந்து காணப்படுகின்றன. பின்புறத்தை காட்டும் காரின் வெளிப்புற கண்ணாடிகள் செவ்வக வடிவில் உள்ளன. எங்களுக்கு தெரிந்தவரையில் அதில் 360-டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டத்திற்கான கேமரா பொருத்தப்பட்டு இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அளவில் சிறியதான கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அத்துடன், சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்களுக்கும் மார்க்கெட் பெரியதாகி வருகிறத. இவை இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, இவ்வாறான ஒரு அளவில் சிறியதான எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஹூண்டாய் களமிறக்குகிறது. டாடா பன்ச் இவி (Punch EV) மற்றும் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனையில் போட்டியாக இந்த புதிய ஹூண்டாய் காரின் அறிமுகம் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027இன் துவக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








