அடிமாட்டு விலையில் புது காரை களமிறக்கிய ஹூண்டாய்! நாடே இதுக்காகதான் காத்துகிட்டு இருந்துச்சு! டாடாவுக்கு செக்!

இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) செக்மெண்ட்டில், டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய 2 கார்கள், நேருக்கு நேர் போட்டியிட்டு வருகின்றன. இதில், டாடா பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று (மார்ச் 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Hyundai Exter Facelift

இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. அவை 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் + சிஎன்ஜி ஆகிய இன்ஜின்கள் ஆகும் ஆகும்.

இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வசதிகள் (Features): வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 60க்கும் மேற்பட்ட வசதிகள் உடன் கூடிய ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், பின் பக்க பயணிகளுக்கு டைப்-சி யூஎஸ்பி போர்ட், பேடில் ஷிஃப்டர்கள், மெட்டல் பெடல்கள் போன்றவை எல்லாம், ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான வசதிகள் ஆகும்.

Hyundai Exter Facelift Airbags

அத்துடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகளையும், ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள் (Safety Features): 6 ஏர்பேக்குகள், டேஷ்கேம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்றவை எல்லாம், ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகள் ஆகும்.

டிசைன் (Design): பிளாக் ரேடியேட்டர் க்ரில், பிரிட்ஜ் டைப் ரூஃப் ரெயில்கள், விங் டைப் ஸ்பாய்லர், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா போன்றவை எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க டிசைன் அம்சங்கள் ஆகும்.

முன்பதிவுகள் (Bookings): ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது டீலர்ஷிப்கள் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

விலை (Price): இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.80 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.42 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பழைய மாடல் உடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன், தொழில்நுட்பம், சௌகரியம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் 25 மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் உயரமான மற்றும் அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட கார் இதுதான் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே பயணிகளுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும் என நம்பலாம். மேலும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்களில், லக்கேஜ்களை வைத்து கொள்ள போதுமான இடவசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ட்யூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்பேர் டயர், காரின் பாடிக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, பாதுகாப்பு வசதிகளில் தலை சிறந்து விளங்குகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 45க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் 30 பாதுகாப்பு வசதிகள், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த 30 பாதுகாப்பு வசதிகளும், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 20, 2026, 18:23 [IST]
English summary
Hyundai exter facelift launched in india price safety features engine options bookings and more
மேலும்... #hyundai #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+