ரூ.9.42 லட்சத்தில் கிடைக்கும் புதிய ஹூண்டாய் கார்! நேரில் பார்க்க இப்படிதான் இருக்குமா?

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியான புதிய கார், 2026 எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (Exter Facelift) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த எக்ஸ்டர் காரில் அப்கிரேட்களை கொண்டுவந்து ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.9.42 லட்சம் வரையில் புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.9.42 லட்சத்தில் கிடைக்கும் எச்.எக்ஸ்10 (HX10) வேரியண்ட் பார்க்க எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா? புதிய எக்ஸ்டர் எச்.எக்ஸ்10 காரின் தோற்றம் மற்றும் அதில் மட்டுமே கிடைக்கும் அம்சங்களை விவரிக்கும் வீடியோ ஒன்று 'ஏரியா ஆஃப் இண்ட்ரெஸ்ட்' (Area of Interest) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

2026 hyundai exter facelift hx10 variant at dealership showroom

அறிமுகத்தை தொடர்ந்து டீலர்ஷிப் ஷோரூமுக்கு கார் கொண்டுவரப்பட்ட பின் இந்த வீடியோ லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் மொத்தம் 8 விதமான நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷோரூமில் காட்சித்தரும் இந்த எக்ஸ்டர் எச்.எக்ஸ்10 வேரியண்ட் கிரே நிறத்தில் உள்ளது. முதலாவதாக, காரின் முன்பக்கத்தை பற்றி பார்ப்போம்.

ஏனெனில், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரின் முன்பக்கத்தில்தான் முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்டர் எச்.எக்ஸ்10 காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகளை இணைக்கும் விதமாக பளபளக்கும் கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் ஒன்று உள்ளதை பார்க்கலாம். அதன் மீதுதான் 'எக்ஸ்டர்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரின் முகப்பு மூக்கு பகுதி நேர்த்தியான மற்றும் மாடர்ன் லுக்கில் உள்ளது.

2026 hyundai exter facelift hx10 variant at dealership showroom

முன்பக்க க்ரில் பகுதி முன்பை விட பெரியதாக உள்ளது. அதேபோல், முன்பக்க பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் இப்போது சில்வர் நிறத்திலான இன்செர்ட்கள் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்ட புதிய எக்ஸ்டர் காரிலும் ஹலோஜன் புரோஜெக்டர் ஹெட்லைட்களே தொடர்கின்றன; எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படவில்லை.

பிரிமியம் தரத்தில் காரை காட்ட வேண்டும் என்பதற்காக, இந்த விலைமிக்க டாப் எச்.எக்ஸ்10 வேரியண்ட்டில் ஹெட்லைட்களை சுற்றிலும் குரோம் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள கவனிக்கத்தக்க மாற்றம் என்னவென்றால், அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டான இதில் புதிய டிசைனில் 15-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் கதவு வெளிப்புறங்களில் கருப்பு நிறத்தில் பாடி கிளாடிங்குகளும், தடிமனான வீல் ஆர்ச்களும் காரின் தோற்றத்தை மெருக்கேற்றி காட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூரையில், பாலம் போன்றதான டிசைனில் கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில்களும், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனாவும் உள்ளன.

காரின் C-பில்லருக்கான கார்னிஷ் மற்றும் பின்பக்கத்தில் டெயில்லைட்களை இணைக்கும் ஸ்ட்ரிப்பின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் வெர்னா (Verna) காரில் உள்ளதை போன்று இரு இறக்கைகள் டிசைனில் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் எச்.எக்ஸ்2, எச்.எக்ஸ்3, எச்.எக்ஸ்4, எச்.எக்ஸ்4+, எச்.எக்ஸ்6, எச்.எக்ஸ்8 மற்றும் எச்.எக்ஸ்10 ஆகிய வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டாப் வேரியண்ட்டான எச்.எக்ஸ்10 தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். அதுவும், இந்த வேரியண்ட்டின் வெளிப்புறத் தோற்றத்தை பற்றி மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இந்த வேரியண்ட்டில் உட்புறம் எப்படி இருக்கும் என்பதை அடுத்த இன்னொரு தொகுப்பில் பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 29, 2026, 5:30 [IST]
English summary
Hyundai exter facelift top hx10 variant look at dealership showroom check all details here
மேலும்... #hyundai #car showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+