பைக்கை விட குறைவான விலையில் ஹூண்டாய் கார்! தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க! மாருதி, டாடாவுக்கு செக்!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிக 'டிமாண்ட்' உள்ளது.

இதன் காரணமாகவே டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்கள் எல்லாம், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

Hyundai Exter Side Design

AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5,612 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5,270 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 342 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Tata Punch

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் இருக்கிறது. இருப்பினும் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், 20.32 செமீ ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர் (அனைத்து இருக்கைகளுக்கும்), எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம், இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

மேலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி என ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் பெட்ரோல் + சிஎன்ஜி உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.74 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட குறைவான விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.61 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்தும் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) போன்ற கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் எக்ஸ்டர் நேரடி போட்டி மாடலாக இருந்து வருகிறது. ஆனால் இதில், டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் ஜனவரி 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனத்திற்கும் எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2026, 10:48 [IST]
English summary
Hyundai exter sales report december 2025 6 per cent growth
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+