6 லட்சம் கூட இல்ல! அடிமாட்டு விலையில் எஸ்யூவி ரக கார்! டாடாவை கதற விட ரெடியாகும் கொரியன் கம்பெனி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளது.
ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு, ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்தான். ஆம், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,621 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 6,068 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 447 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் 7.37 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய கலர் ஆப்ஷன்கள், தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டிருப்பதை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் (Safety Features) போன்ற அம்சங்களையும், ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை 5.74 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், அதன் விலை சற்று உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவின் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை ஹூண்டாய் எக்ஸ்டர் தக்க வைத்து கொள்ளும் என்றே நாங்கள் கருதுகிறோம். மேலும் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் எனவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








