வெறும் 6 லட்ச ரூபாயில் கிடைக்கும் ஹூண்டாய் கார் இதுதான்! ஓட்டிப் பார்க்குறவங்க எல்லாரையும் வாங்க வெச்சிடுது!
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார்கள் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 49% அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் எத்தனை எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், ஹூண்டாயின் இந்த மைக்ரோ-எஸ்யூவி வகையை சேர்ந்த காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி வகை கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி வருவதை உணர்ந்து ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு எஸ்யூவி வகை கார்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்யூவி கார்களை அளவில் சிறியதாக, குறைந்த விலையில் வாங்கவே பலரும் விரும்புகின்றனர் என புரிந்துக் கொண்ட ஹூண்டாய் அதன்படி அறிமுகம் செய்த கார் தான் எக்ஸ்டர் ஆகும்.

சமீப காலத்தில் இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றாலும், ஹூண்டாயில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக எக்ஸ்டர் உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்து என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2026 ஏப்ரலில் மொத்தம் 8 ஆயிரத்து 96 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் லிஸ்ட்டில் எக்ஸ்டர் 23வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 8,096 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் 5,416 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், எக்ஸ்டர் கார்களின் விற்பனை 49% அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரலில் 2 ஆயிரத்து 680 எக்ஸ்டர் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 618 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த மார்ச் மாதத்தில் 6 ஆயிரத்து 478 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமின்றி, கடந்த சில மாதங்களாகவே எக்ஸ்டர் கார்களின் விற்பனை கொஞ்சம் சுமாராகவே இருந்து வந்தது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 4 ஆயிரத்து 200 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அந்த வகையில் பார்த்தால், கடந்த மார்ச் மாதத்தில் எக்ஸ்டர் கார்களின் விற்பனை சற்று எழுச்சிக் கண்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அது இன்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஹூண்டாயின் அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி காரான எக்ஸ்டர் தற்சமயம் ரூ.5.80 லட்சத்தில் இருந்து ரூ.9.42 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எச்.எக்ஸ்2, எச்.எக்ஸ்3, எச்.எக்ஸ்4, எச்.எக்ஸ்4 பிளஸ், எச்.எக்ஸ்6, எச்.எக்ஸ்8 மற்றும் எச்.எக்ஸ்10 உள்ளிட்ட வேரியண்ட்களில் எக்ஸ்டர் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் பெட்ரோல் என்ஜினிலும், சிஎன்ஜி ஆப்ஷனிலும் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படுவது இல்லை. இருப்பினும், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டட்-மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன என்றாலும், அடாஸ் (ADAS) போன்ற மாடர்ன் அம்சங்கள் வழங்கப்படாதது சற்று குறையாகவே பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பன்ச் என்கிற பிரபலமான டாடா எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாகவே ஹூண்டாய் கார்கள் சற்று பிரீமியம் தரத்திலானவை என கூறப்பட்டாலும், எக்ஸ்டர் கிட்டத்தட்ட பன்ச் காரின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் எக்ஸ்டர் கார்களின் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications