எக்ஸ்டர் காரோட விலை வெறும் ரூ.6 லட்சம் தான்.. ஆனால் எந்த வேரியன்டை வாங்குவது? இதைப் படிங்க முதல்ல!

சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய். டாடாவின் பன்ச் மாடலுக்குப் போட்டியாக இந்த எக்ஸ்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டுமே மைக்ரோ எஸ்யூவி வகையைச் சேர்ந்த கார் மாடல்களே. டிசைனில் சின்னச் சின்ன மாற்றங்கள், புதிய வசதிகள் மற்றும் புதிய நிறங்களுடன் எக்ஸ்டர் எஸ்யூவியை ஹூண்டாய் அப்டேட் செய்துள்ளது.

சமீபமாக தாங்கள் அப்டேட் செய்யும் கார் மாடல்களில் வேரியன்ட்களின் பெயர்களையும் மாற்றி வருகிறது ஹூண்டாய். அந்த வகையில் புதிய எக்ஸ்டர் மாடலின் வேரின்ட்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. எத்தனை வேரியன்ட்களாக புதிய எக்ஸ்டர் எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு வேரியன்டிலும் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, உங்களுக்கு எந்த வேரியன்ட் சிறப்பான தேர்வாக இருக்கும் ஆகிய விவரங்களை எல்லாம் இங்கே நாம் பார்க்கலாம்.

Hyundai Exter Front

புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிப்ட் மாடலை HX2, HX3, HX4, HX4+, HX6, HX8 மற்றும் HX10 என ஏழு வேரியன்ட்களாக வெளியிட்டுள்ளது ஹூண்டாய். இந்தக் காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்+CNG என இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். இது அப்டேட்டிற்கு முந்தைய எக்ஸ்டர் மாடலில் இருந்த அதே இன்ஜின்கள் தான். மெக்கானிக்கலாக இவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். CNG இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே.

வேரியன்ட் வாரியாக கொடுக்கப்பட்டிரு்கும் வசதிகள்:
HX2: எக்ஸ்டர் லைன்அப்பில் அடிப்படை வேரியன்ட் இது. இதனை ரூ.5.80 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். இந்த வேரியன்டில் 6 ஏர்பேக்குகள், ஹாலஜன் முகப்பு விளக்குகள், LED பின்பக்க விளக்குகள், கவர்களுடன் கூடிய 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், EBD-யுடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன், அனைத்து பயணிகளுக்கு ரிமைன்டர்களுடன் கூடிய 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ஃபேப்ரிக் சீட்கள், செமி டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, மேனுவல் ஏசி, முன்பக்கம் பவர் விண்டோக்கள், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, பின்இருக்கை பயணிகளுக்கு ஹெட்ரெஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, முன்பக்கம் 12V பவர் அவுட்லெட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Hyundai Exter Inside

HX3 வேரியன்ட்: இந்த வேரியன்டை ரூ.6.24 லட்சம் முதல் ரூ.7.44 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்க முடியும். மேலே HX2 வேரியன்டில் நாம் பார்த்த அனைத்து வசதிகளும் இந்த HX3 வேரியன்டிலும் உண்டு. அதனைத் தவிர்த்து, 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஸ்டீயரிங் வீலிலேயே இன்ஃபோடெயின்மென்ட் கண்ட்ரோல்கள், முன்பக்க பயணிகளுக்கு டைப்-C USB போர்ட், பின்பக்க பார்க்கிங் கேமரா மற்றும் டிரைவர் ரியர்வியூ மானிட்டர், ரூபில் ஆண்டனா ஆகிய வசதிகள் இந்த வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

HX4 வேரியன்ட்: இந்த வேரியன்டை ரூ.7.22 லட்சம் முதல் ரூ.8.27 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்க முடியும். மேலே HX3 வேரிண்டில் நாம் பார்த்த அனைத்து வசதிகளும் இந்த HX4 வேரியன்டிலும் உண்டு. அவற்றுக்கு மேலாக, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், LED DRLகள், டூயல் டோன் கவர்களுடன் கூடிய 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், பின்பக்க ஏசி வென்ட்கள், அனைத்தும் பவர் விண்டோர்கள், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான வெளிப்புற ரியர்வியூ மிரர்கள் (ORVM), பின்பக்க பயணிகளுக்கும் டைப்-C USB போர்ட்கள் ஆகிய வசதிகள் இந்த வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

HX4+ வேரியன்ட்: ரூ.8.06 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட இந்த வேரியன்டில், நாம் மேலே பார்த்த வசதிகளுடன் கூடுதலாக, ORVM-களில் LED இன்டிகேட்டர்கள், சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

HX6 வேரியன்ட்: ரூ.7.95 லட்சம் முதல் ரூ.8.94 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இந்தக் குறிப்பிட்ட வேரியன்டை நாம் வாங்கலாம். HX4+ மற்றும் அதற்கு கீழான வேரியன்ட்களில் நாம் பார்த்த அனைத்து வசதிகளும் இந்த HX6 வேரியன்டிலும் இருக்கும். அவற்றுடன் கூடுதலாக, டேஷ்கேம், ரியர் டீஃபாகர், ப்ரொஜெக்டார் ஹாலஜன் முகப்பு விளக்குகள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டனா, பேடில் ஷிப்டர்கள் (ஆட்டோமேட்டிக்கில் மட்டும்), க்ரூஸ் கண்ட்ரோல் (பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும்), ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் மடித்துக் கொள்ளும் வகையிலான டிரைவர் சைடு செண்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

HX8 வேரியன்ட்: ரூ.8.36 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த வேரியன்டை நாம் வாங்க முடியும். மேலே பார்த்த வசதிகளுடன் இந்த HX8 வேரியன்டில் கூடுதலாக, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபுட்வெல் லைட்டிங், செயற்கை லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லீவர், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், கூல்டு கிளவ்பாக்ஸ், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

HX10 வேரியன்ட்: எக்ஸ்டர் லைன்அப்பில் டாப் எண்டு வேரியன்ட் இந்த HX10 தான். இதனை ரூ.9.42 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். HX8 வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுக்கு மேலாக, OTA அப்டேட்களுடன் கூடிய ஆன்போர்டு நேவிகேஷன், ரூஃபில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டன்களுடன் கூடிய கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் மெட்டல் பெடல்கள் ஆகிய வசதிகள் இந்த டாப் எண்டு வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த வேரியன்டை வாங்குவது? வசதிகள் மற்றும் பட்ஜெட் இரண்டுமே முக்கியம் என்பவர்கள் HX3 அல்லது HX4 ஆகிய இரண்டு வேரியன்ட்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த இரண்டிலுமே கிட்டத்தட்ட வாடிக்கையாளர்கள் அடிப்படையாகக் கேட்கக்கூடிய அனைத்து விதமான வசதிகளும் வந்து விடுகின்றன. சன்ரூஃப் வசதியும் வேண்டும் என்பவர்கள் ஒருபடி மேலே சென்று HX4+ வேரியன்டை தேர்வு செய்யலாம். பட்ஜெட் பெரிய பிரச்சினை இல்லை, அனைத்து வசதிகளும் வேண்டும் என்பவர்கள் HX8 வேரியன்டை தேர்வு செய்யலாம். வசதிகளிலும் விலையிலும், HX8 மற்றும் HX10 வேரியன்ட்களுக்கு இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது குறைவான விலையில் போதுமான வசதிகள் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்டர் இருக்கிறது. வேரியன்ட் வாரியாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வசதிகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வேரியன்டை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். சன்ரூஃப் முதல் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்கள் வரை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளும் எக்ஸ்டர் வேரியன்ட்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வேரியன்டைத் தேர்ந்தெடுத்தாலும், அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு காராகவே இந்த எக்ஸ்டர் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 10:27 [IST]
English summary
Hyundai exter which variant should you buy all details here
மேலும்... #hyundai #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+