ரூ.5.55 லட்சம் விலை கொண்ட கார்.. தள்ளுபடியோட இன்னும் கம்மி விலையில வாங்கலாம்.. எப்படி தெரியுமா?
இந்தியாவில் ஹூண்டாயின் தொடக்கநிலை கார் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது 'கிராண்டு i10 நியாஸ்' (Grand i10 NIOS). ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த இந்தக் கார் மாடல் தான் ஹூண்டாயின் குறைந்த விலை கொண்ட கார் மாடலாகவும் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏப்ரல் மாதம் இந்தக் காருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும், இந்த மாடலின் புதிய 'வைப் எடிஷன்' (Vibe Edition) வேரியன்ட்களையும் வெளியிட்டுள்ளது.
முதலில் இந்த காருக்கான ஏப்ரல் மாத சலுகைகள் குறித்துப் பார்க்கலாம். இந்த ஹேட்ச்பேக் மாடலை ரூ.5.55 லட்சம் முதல் ரூ.7.92 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இந்த ஏப்ரல் மாதம் ரூ.68,000 வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் இந்தக் காரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

இதில் ரூ.20,000 வரையிலான தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் ரூ.18,000 மதிப்புடைய மற்ற சலுகைகளை ஹூண்டாய் வழங்குகிறது. இந்தத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளானது இந்த ஏப்ரல் மாதம் முடியும் வரையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குறைவான விலையில் இந்த கிராண்டு i10 நியாஸ் மாடலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஹூண்டாய் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் கிராண்டு i10 நியாஸ் மாடலின் வைப் எடிஷன் வேரியன்ட்களைப் பார்க்கலாம். தற்போது இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் மாடலை, எரா, மேக்னா, கார்ப்பரேட், ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் அஸ்டா என ஆறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இவற்றில் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் (O) ஆகிய வேரியன்ட்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஸ்போர்ட்ஸ் வைப் மற்றும் ஸ்போர்ட்ஸ் (O) வைப் ஆகிய இரண்டு வைப் எடிஷன் வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஸ்டாண்டர்டு வேரியன்ட்களை விட சற்று கூடுதலான விலையில், பல்வேறு கூடுதலான வசதிகள் மற்றும் தனித்துவமான டிசைன அம்சங்களை புதிய வைப் எடிஷன் கொண்டுள்ளது. மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான். இந்த மாடல்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளையும் கொண்டுள்ளது. ரூ.7.09 லட்சம் மற்றும் ரூ.7.73 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய சிறப்பு எடிஷன் வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டிசைன் என்று வரும் போது புதிய மாடல்களின் உட்புறம் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் தனித்துத் தெரியும் வகையில் ஆங்காங்கே ரெட் இன்ஸர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 15 இன்ச் அலாய் வீல்கள் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது இந்த சிறப்பு எடிஷன் மாடலை தனித்துக் காட்டுகிறது. இத்துடன் இந்தக் காருக்கு டைட்டன் மேட் கிரே என்ற புதிய நிறத்தையும் அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.
வசதிகள் என்று வரும் போது, ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஏசி, ரியர் ஏசி வென்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், குறிப்பாக இந்த செக்மெண்டிலேயே முதல் முறையாக டேஷ்கேம் ஆகிய வசதிகள் புதிய வைப் எடிஷனில் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் முறை கார் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த கிராண்டு i10 நியாஸ் ஹேட்ச்பேக் மாடலை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இருசக்கர வாகனத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாற விரும்பும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இந்த கிராண்டு i10 நியாஸ் ஹேட்ச்பேக்கும் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 5 லட்சம் கிராண்டு i10 நியாஸ் கார்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய குறைவான விலை கொண்ட கார் மாடலை வாங்கத் திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்றால் இந்தக் காரை வாங்க இதுவே சிறப்பான நேரம். பட்ஜெட் முக்கியம் என்பவர்கள் சலுகைகளுடன் தொடக்கநிலை வேரியன்டையும், வசதிகள் முக்கியம் என்பவர்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சிறப்பு எடிஷன் வேரியன்ட்களையும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








