புதிய விலை குறைவான ஹேட்ச்பேக்கை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனமானது நான்காம் தலைமுறை i20 ஹேட்ச்பேக் மாடலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இல்லை, பிரேசிலில். முற்றிலும் புதிய விதமான டிசைனில் புதிய i20-யை வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். ஹேட்ச்பேக் தான் என்றாலும் கிராஸ்ஓவர் போன்ற லுக்கைக் கொண்டிருக்கிறது புதிய i20. இந்தியாவிலும் இந்த நான்காம் தலைமுறை i20 மாடலை அடுத்தாண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னால் நின்று பார்க்கும் போது முன்பை விட இன்னும் கொஞ்சம் ஸ்டைலான காராக தெரிகிறது புதிய நான்காம் தலைமுறை i20 ஹேட்ச்பேக். புதிய காரின் முகப்புப் பக்கத்தில் டூயல் பாடு பிக்சல் வடிவ LED முகப்பு விளக்குகளைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். அதற்கு நடுவில் காரின் அகலத்திற்கும் நீளும் லைட் பார், இரண்டு பக்கமும் Y வடிவ LED DRL-களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

Hyundai i20

பிரஷ்டு அலுமினியம் ஹூண்டாய் லோகோவுடன் பானெட்டும் புதிய வடிவில் மாற்றப்பட்டிருக்கிறது. கிரில் மற்றும் பம்பர்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் புதிய வடிவில் 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வீல் ஆர்ச்கள் மற்றும் காரின் கீழ்பகுதியில் சற்று பெரிதாகவே கருப்பு நிறத்தில் கிளாடிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது காருக்கு சற்று ரக்கடான தோற்றத்தையும் கொடுக்கிறது.

பின்பக்கம் C வடிவ LED விளக்குகளுக்கு இடையிலும் மெல்லிய லைட் பார் ஒன்றைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். பின்பக்கம் தான் முழுவதுமாக ஒரு ஹேட்ச்பேக்கிற்கான லுக்கைக் கொண்டிருக்காமல், ஒரு கிராஸ்ஓவர் போலான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஹூண்டாய் வடிவமைத்திருக்கிறது. ஃபார்ஸ் சில்வர் டிஃப்யூஸருடன் பின்பக்க பம்பரையும் மறுவடிவமைப்பு செய்துள்ளது அந்நிறுவனம்.

Hyundai i20

இந்த டிசைன் அம்சங்களை இந்தியாவில் வெளியாகவிருக்கும் புதிய i20 காரிலும் நாம் பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பிரேசிலிய i20 மாடலை விட இந்திய i20 மாடலில் அளவில் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. காரின் உட்புறம் டூயல் டோன் கேபினைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். டேஷ்போர்டில் இரண்டு புதிய 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவாகவும் இருக்கும்.

இந்த பிரேசிலிய i20 காரில் 1.0 லிட்டர் TGDI ஃப்ளெக்ஸ் 3 சிலிண்டர் இன்ஜினைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 115 hp பவர் மற்றும் 172 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தை 11.7 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜின், அதிகபட்சமாக மணிக்கு 184 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது.

இந்திய மதிப்பிற்கு பிரேசிலில் 18.77 லட்சம் ரூபாய் முதல் 26.29 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்தக் கார் அந்நாட்டில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நான்காம் தலைமுறை i20 காரை ஹூண்டாய் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதில் உள்ள நிறைய அம்சங்களை இந்திய மாடலிலும் நாம் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனால் இந்தியாவில் பட்ஜெட் காராகவே i20 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தொழில்நுட்ப ரீதியில் இதே அளவு மேம்பட்ட அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் 5.99 லட்சம் ரூபாய் முதல் 10.63 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் காரை ஹூண்டாய் தற்போது விற்பனை செய்து வருகிறது. அப்டேட் செய்யப்படும் கார் இதனை விட சற்று கூடுதல் விலையைக் கொண்டிருக்கும்.

Article Published On: Saturday, June 13, 2026, 13:07 [IST]
English summary
Hyundai i20 hatchback updated fourth generation model launched
மேலும்... #hyundai #cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out