ஐ20 காரின் விலையை தரமட்டத்துக்கு குறைத்த ஹூண்டாய்! மாருதி, டாடாவுக்கு இந்நேரம் பயத்துல காய்ச்சலே வந்திருக்கும்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐ20 (Hyundai i20). பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த ஐ20 காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
ஹூண்டாய் ஐ20 காரில் தற்போது ஏரா (Era) வேரியண்ட் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.87 லட்ச ரூபாயாக இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் ஐ20 காரின் எரா வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டைப்-சி யூஎஸ்பி சார்ஜர், டெலஸ்கோபிக் ஸ்டியரிங் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கனவே விற்பனையில் உள்ள 2 வேரியண்ட்களின் (Variants) விலையை ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிரடியாக குறைத்தும் உள்ளது.
இதன்படி ஹூண்டாய் ஐ20 காரின் மேக்னா எக்ஸ்சிக்யூடிவ் (Magna Executive) வேரியண்ட்டின் விலை முன்பு 6.87 லட்ச ரூபாயாக இருந்தது. அதாவது இதுதான் முன்பு ஹூண்டாய் ஐ0 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். ஆனால் தற்போது இந்த வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 6.74 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹூண்டாய் ஐ20 காரின் மேக்னா (Magna) வேரியண்ட்டின் விலை முன்பு 7.12 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது இந்த வேரியண்ட்டின் விலை வெறும் 7 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதில், மேக்னா எக்ஸ்சிக்யூடிவ் வேரியண்ட்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சுறா துடுப்பு ஆன்டெனா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மேக்னா வேரியண்ட்டில் இவற்றுடன் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி பகல் நேர விளக்குகள், ரியர் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் டீலர்ஷிப்பில் நீங்கள் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்று கொள்ள முடியும். இதற்கு ஹூண்டாய் நிறுவனம் 15 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயம் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 கார் இந்திய சந்தையில் கடந்த 15 வருடங்களாக விற்பனையில் இருந்து வருகிறது. இந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் ஹூண்டாய் ஐ20 காரை வாங்கியுள்ளனர். இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையின் மூலம் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








