ஐ20 காரின் புதிய தலைமுறை மாடலை களமிறக்கும் ஹூண்டாய்! மாருதி, டாடாவுக்கு எமனாக மாற போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐ20 (Hyundai i20). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,624 ஹூண்டாய் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 3,525 ஹூண்டாய் ஐ20 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 2,099 ஹூண்டாய் ஐ20 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஹூண்டாய் ஐ20 கார் விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காரின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர் ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.57 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காரின் செயல்திறன் மிக்க வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது. அது ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) ஆகும்.
அதன் ஆரம்ப விலை 9.22 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் அதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.67 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
ஹூண்டாய் ஐ20 காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் மேனுவல் மற்றும் ஐவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் ஹூண்டாய் ஐ20 காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் மேனுவல் மற்றும் ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் ஐ20 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
ஹூண்டாய் ஐ20 காரில் தற்போது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற காரணங்களால், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications