இந்தியாவில் 3வது கார் ஆலைக்கு இடம் தேடும் ஹூண்டாய்... லிஸ்ட்ல தமிழ்நாடு இல்லை?

இந்தியாவில் தனது உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மூன்றாவது உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனே ஆகிய இடங்களில் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ள அந்நிறுவனம், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு புதிய தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

தனது புதிய ஆலையை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் குஜராத்தின் சனந்த் ஆகிய பகுதிகளில் அமைப்பது குறித்து ஹூண்டாய் பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் புரொஃபஷனல் தளத்தின் செய்தி தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Hyundai Plant

இந்த புதிய ஆலையில் 5 முதல் 7 ஆண்டுகளில் கார் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். இந்த திட்டத்தின் மொத்த முதலீடு காலப்போக்கில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது ஹூண்டாயின் சென்னை தொழிற்சாலை ஆண்டுக்கு 8.24 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதனுடன் புனே ஆலையையும்ம் இணைத்தால், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9.94 லட்சம் கார்கள் என்ற அளவில் உள்ளது. இதனை ஆண்டுக்கு 15 லட்சம் ஆக உயர்த்துவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Also Read

மேலும், இந்தியாவில் பல புதிய மாடல்களை ஹூண்டாய் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக உற்பத்திப் பிரிவுகள் தேவைப்படுவதும் மூன்றாவது ஆலையை கட்ட வேண்டிய அவசியம் அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 26 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எஸ்யூவி, ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

ஹூண்டாயின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்றுமதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் 30 சதவீதத்தை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பும் நோக்கமும் நிறுவனத்தின் நீண்டகால திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே புதிய தொழிற்சாலை உள்நாட்டு தேவையை மட்டுமின்றி ஏற்றுமதிக்கான உற்பத்தி மையமாகவும் செயல்பட வாய்ப்புள்ளது.

Also Read

புதிய ஆலையில் நடுத்தர அளவிலான எஸ்யூவிகள், எம்பிவிகள் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நிலம் கிடைக்கும் தன்மை, மாநில அரசின் சலுகைகள், உதிரிபாக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி, போக்குவரத்து வசதி மற்றும் துறைமுக இணைப்பு போன்ற பல அம்சங்களை கணக்கில் கொண்டே இறுதி இடம் தேர்வு செய்யப்படும்.

இதனால் இந்தியாவில் ஹூண்டாயின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது உற்பத்தி ஆலை முக்கியமானதாக அமையலாம். முதலீடு, இடம் மற்றும் உற்பத்தி தொடங்கும் காலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக கார் ஆலைகளை அமைத்து வர்த்தகம் செய்து வரும் ஹூண்டாய் தற்போது குஜராத் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் மூன்றாவது கார் ஆலையை அமைக்க முயற்சி செய்து வருகிறது. ரூ.17,000 கோடி முதலீட்டு திட்டத்துடன் இந்த புதிய ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய ஆலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பட்டியலில் தமிழ்நாடு இல்லை. மேலும், வடக்கு பிராந்திய பகுதிகளுக்கு கார்களை டீலர்களுககு குறைவான நேரத்தில், எளிதாக அனுப்புவதற்கான போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை கணக்கு வைத்து நாட்டின் மேற்கு பிராந்திய மாநிலங்ளில் ஆலை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

Source: Autocar Professional

Article Published On: Wednesday, September 30, 2026, 11:26 [IST]
English summary
Hyundai india third car manufacturing plant india location investment production capacity
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out