10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்டுவந்த போதே இந்த கார் ஹிட் அடிக்கும்னு தெரிஞ்சி போச்சு... ஹூண்டாய் ஸ்மார்ட் மூவ்

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தனது வென்யூ ஃபேஸ்லிஃப்ட் (Venue Facelift) எஸ்யூவி காரில் புதிய 'எச்.எக்ஸ்5 பிளஸ்' (HX5 Plus) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கிறது. எச்.எக்ஸ்5 பிளஸ் வேரியண்ட், அடிப்படை பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, மேம்பட்ட ஸ்டைல் மற்றும் பிரிவிலேயே முதன்மையான அம்சங்களுடன் 2025ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல், அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே 50,000 முன்பதிவுகளைப் பெற்று அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இது, அதன் கவர்ச்சிகரமான விலை, தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த வேரியண்ட்கள் மற்றும் பரந்த அளவிலான என்ஜின் ஆப்ஷன்களால் சாத்தியமாகியுள்ளது.

hyundai venue suv hx5 car

இந்த நிலையில் தற்போது, ஹூண்டாய் நிறுவனம் புதிய எச்.எக்ஸ்5+ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டாண்டர்ட் எச்.எக்ஸ்5 வேரியண்ட்டை விட கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சுமார் ரூ.85,000 கூடுதல் விலையில் வழங்குகிறது. எச்.எக்ஸ்5 பிளஸ் வேரியண்ட், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

அதிகப்பட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எச்.எக்ஸ்5+ வேரியண்ட்டில் ரூஃப் ரெயில்கள், குவாட்-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், பின்பக்க சன்ஷேட்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரோல்ஓவர் சென்சார், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் உள்ளன.

hyundai venue suv hx5 car

ஸ்டோரேஜ் பகுதி உடன் கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் சென்சார்கள் & கேமரா, பின்புற வைப்பர் & வாஷர், அத்துடன் குறுக்கே இடையூறு ஏற்பட்டால் அதனை அறிந்து செயல்படும் ஆன்டி-பிஞ்ச் வசதி உடன் கூடிய ஆட்டோ அப்-டவுன் டிரைவர் பவர் விண்டோவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் அனைத்தும், முன்பு உயர் ரக எச்.எக்ஸ்6 வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்தன. ஆனால், எச்.எக்ஸ்5 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாடிக்கையாளர்கள் இவற்றை மிகவும் மலிவு விலையில் பெற முடியும். எச்.எக்ஸ்5 பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் முதல் தொடங்குகிறது. மேலும், எச்.எக்ஸ்4 வேரியண்ட்டில் இப்போது டிரைவர் சீட் உயரத்தை சரிசெய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

எச்.எக்ஸ்5 பிளஸ் காரில் சிங்கிள்-பேன் பனோரமிக் சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட ஸ்மார்ட் கீ, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளன. ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், வைகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), முன் & பின்பக்க சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர்கள், ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர் பாயிண்ட்கள், மற்றும் காரின் வேகத்தை உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பயணத்தை இனிதாக்கும்.

hyundai venue suv hx5 car

அடிப்படை 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கூடுதலாக, வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் டர்போ என்ஜின் 120 பிஎஸ் பவரையும், 172 என்.எம் டார்க் திறனையும் வழங்கும்.

அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 116 பிஎஸ் பவரையும், 250 என்.எம் டார்க் திறனையும் வெளியிடுகிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். புதிய தலைமுறை வென்யூ ஒன்பது வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் வென்யூ வாடிக்கையாளர்களிடம் இருந்து மேற்பட்ட முன்பதிவுகளுடன் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், புதிய எச்.எக்ஸ்5+ வேரியண்ட்டின் அறிமுகம், வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கூடுதல் வசதி மற்றும் அம்சங்களுடன் வென்யூவின் மதிப்பை மேலும் மேம்படுத்துகிறது. இதனால், வரும் மாதங்களில் ஹூண்டாய் வென்யூ காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2026, 10:57 [IST]
English summary
Hyundai introduces new hx5 plus variant in venue suv car check all details here
மேலும்... #hyundai #hyundai venue #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X