வெறும் 69 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாம் நல்லா இருந்தும் ஏன் விக்கல தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல எச்யூவி காரான அயானிக் என்ற எஸ்யூவி காராக கடந்த டிசம்பர் மாதம் குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது. எவ்வளவுதான் குறைவான விற்பனை பதிவு செய்தாலும் கடந்த ஆண்டு டிசம்பர் ஒப்பிடும்போது நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி முரணான அறிக்கைகள் வருவதற்கான காரணம் என்ன விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான கார்களாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் வென்யூ ஆகிய கார்கள் தலா பத்தாயிரம் வாடிக்கையாளர்களை பெற்று நல்ல விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான அயானிக் 5 என்ற கார் இந்தியாவில் வெறும் 69 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

31 நாட்கள் விற்பனை செய்ய முயற்சி செய்தும் வெறும் 69 வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த காரை பெற்றுள்ளார்கள் இருந்தாலும் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனை ஒப்பிடும்போது இந்த காரின் விற்பனை 188 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாக அதாவது டிசம்பர் மாதம் வெறும் 24 கார்கள் மட்டுமே விற்பனையாகியு்ளது. தற்போது டபுள் மடங்கு மேல் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஹுண்டாய் அயானிக் 5 காரைக் பொருத்தவரை 72.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 217 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிங்கிள் சார்ஜில் 631 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 80 சதவீத சார்ஜை 21 நிமிடத்தில் ஏற்றிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 150 கிலோவாட் சார்ஜரும் வழங்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் காருக்குள்ளே கேபின் வசதியின் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக 12.3 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்கிரீன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே சிஸ்டமாகவும் பயன்படுகிறது. இதுபோக பானாமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா ,அடாஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலை பொருத்தவரை ரூபாய் 46.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
விற்பனை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கிறது. அதிக விலை காரணமாக மிக குறைவான வாடிக்கையாளர்களை இந்த காரை வாங்கி வருகிறார்கள். இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் நிச்சயம் இந்த காருக்கான வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் போட்டி நிறுவன தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாக அதிக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பல சிறப்பான கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் இப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது இந்தியாவில் உள்ள மார்க்கெட்டை சோதனை செய்வதற்காக தான் அதற்காக இந்நிறுவனம் யுத்திகளை பின்பற்றினாலும் விரைவில் இந்த காரை இந்தியாவில் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படியாக இந்த கார் இந்தியாவிலிருந்து அறிக்கை போட்டால் நிச்சயம் விற்பனை அதிகமாக இருக்கும்


Click it and Unblock the Notifications









