இந்தியாவில் இந்த ஹூண்டாய் காரின் அருமை யாருக்கும் தெரியல! மே மாதம் துவங்கிய உடன் அறிமுகம்!

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்சன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2026 மே மாத துவக்கத்தில் புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று, ஐயோனிக் 5 ஆகும். சற்று விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராக கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐயோனிக் 5 அறிமுகம் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்த இரண்டாவது எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.

hyundai ioniq 5 facelift electric car launch details

இருப்பினும், அதிகப்படியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், ஐயோனிக் 5 விற்பனை இந்திய சந்தையில் பெரிய அளவிற்கு இல்லை. இந்த நிலையில், எப்படியாவது வாடிக்கையாளர்களை ஈர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் களமிறக்கப்படுகிறது.

புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் பெரிய அளவிலான பேட்டரி, திருத்தியமைக்கப்பட்ட வெளிப்புற தோற்றம் மற்றும் மாற்றம் செய்யப்பட்ட உட்புற கேபின் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் தற்சமயம் 72.6kWh பேட்டரி பேக் வழங்கப்படும் நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அளவில் பெரியதான 84kWh வழங்கப்பட உள்ளது.

hyundai ioniq 5 facelift electric car launch details

பேட்டரியின் அளவு பெரியதாகி உள்ளதால், அதற்கேற்ப அது வழங்கும் ரேஞ்சின் அளவும் 570கிமீ ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய பெரிய அளவிலான பேட்டரி ஆனது 350 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனை 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்ப வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

வெளிநாட்டு சந்தைகளில் ஐயோனிக் 5 கார் ஆனது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரியர்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரியர்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக 215 பிஎச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் ஐயோனிக் 5 காரில் கிடைக்கிறது.

பேட்டரியின் அளவு அதிகரிக்கப்பட்டாலும், காரின் எலெக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச இயக்க ஆற்றலில் எந்த வேறுப்பாடும் இருக்காது என்றே நினைக்கிறோம். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஐயோனிக் 5 காரின் முன்பகுதி சில மாற்றங்களை பெறலாம். இரு ஃபாக் விளக்குகள் உடன் பின்பக்க பம்பரின் டிசைன் மாற்றப்படலாம்.

முன்பக்கத்தில் காற்று நுழைவதற்கான துளைகள் பெரியதாக வழங்கப்பட உள்ளன. அலாய் சக்கரங்கள் புதிய ட்யூயல்-டோன் ஃபினிஷை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்க ஸ்பாய்லரின் நீளம் 50மிமீ பெரியதாக்கப்படலாம். மற்றபடி, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் காரின் தோற்றம் சிறிது மாற்றபட்டாலும், தொழிற்நுட்ப அம்சங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது என கூறபடுவதால், காரின் விலையிலும் பெரிய அளவிற்கு அதிகரிப்பு இருக்காது. வழக்கம்போல், ஒரேயொரு வேரியண்ட்டில் வருகிற மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் பிஒய்டி சீலயன் 6 (BYD Sealion 6) முக்கியமான போட்டியாக இருக்கும்.

Article Published On: Tuesday, April 28, 2026, 15:42 [IST]
English summary
Hyundai ioniq 5 facelift electric car india launch check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+