தமிழகத்துக்கு வடபோச்சே... புனேயில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் ஆலை திறப்பு!!

இந்தியாவில் தனது கார் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (Hyundai Motor India) மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள தலேகான் (Talegaon) உற்பத்தி ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த ஆலையின் மூலம் இந்தியச் சந்தைக்கான கார்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியையும் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் படிப்படியாக ரூ.11,000 கோடி வரை முதலீடு செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தனது நீண்டகால வளர்ச்சியை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் இந்த முதலீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

Hyundai Pune Plant Inagauration

தற்போது இந்த ஆலை ஆண்டுக்கு 1.7 லட்சம் கார்களைத் தயாரிக்கும் வகையில் உற்பத்தித் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் படிப்படியாக அதிகரித்து, 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 3.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் மோட்டார் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான விரிவாக்கப் பணிகளில் புதிய முதலீடு முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த ஆலையில் தற்போது புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியச் சந்தைக்கு மட்டுமின்றி, 35க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக வலுப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

Also Read

இந்த ஆலையில் பல்வேறு கார் மாடல்களைத் தயாரிக்கும் வகையில் உற்பத்தி பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் போன்ற வழக்கமான எரிபொருள் வாகனங்களுடன், ஹைபிரிட் கார்களையும் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Hyundai Pune Plant Inagauration

எனினும், வென்யூ மாடலைத் தவிர வேறு எந்தெந்த கார்களை இங்கு தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்த முழுமையான பட்டியலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், கிரெட்டா (Creta), எக்ஸ்டர் (Exter) உள்பட மின்சாரக் கார்கள் இங்கு தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலைக்கு உதிரிபாகங்கள் சப்ளை வழங்கும் வகையில் அதன் உதிரிபாக வினியோக நிறுவனங்களும் மகாராஷ்டிராவில் கணிசமான முதலீடு செய்துள்ளன. இதற்காக 55 விநியோக நிறுவனங்கள் இணைந்து ரூ.4,600 கோடி முதலீடு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்திச் சங்கிலி மூலம் மாநிலத்தில் 18,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சென்னை அருகே கார் ஆலையை அமைத்து உற்பத்திப் பணிகளை மேற்கொண்டு வந்த தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தற்போது உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் புதிய கார் ஆலையை அமைத்துள்ளது.

வட இந்திய பிராந்தியத்திற்கு எளிதாகவும், விரைவாகவும் கார்களை வினியோகிக்கவும், மேற்கத்திய பகுதி நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்றவாறு இந்த கார் ஆலையை உருவாக்கி இருக்கிறது. இந்த ஆலையில் ரூ.11,000 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அடுத்து 3வதாக ஒரு புதிய கார் ஆலையையும் இந்தியாவி்ல அமைக்கும் முயற்சியில் ஹூண்டாய் இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 3வது கார் ஆலையும் தமிழகத்திற்கு கிடையாது என்றும், மஹாராஷ்டிரா அல்லது குஜராத் மாநிலங்களில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Article Published On: Thursday, October 15, 2026, 16:54 [IST]
English summary
Hyundai talegaon pune plant inauguration 11000 crore investment
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out