ஹூண்டாய் கார்களுக்கு இனி பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு கட்டணம்: 15% வரை தள்ளுபடி!

இந்தியாவில் கார் காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயிக்கும் முறையில் புதிய மாற்றத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் புளூலிங்க் (Bluelink) வசதியுடன் மொபைல்போன் அப்ளிகேஷனுடன் இணைக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனப் பயன்பாடு மற்றும் ஓட்டுனர் செயல்பாடுகளின் அடிப்படையில் காப்பீட்டுக் கட்டணத்தில் சலுகைகளைப் பெறலாம்.

காரின் பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு (Usage-Based Insurance - UBI) என்ற இந்தத் திட்டம், பாதுகாப்பான ஓட்டுனர் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் வாடிக்கையாளர்களின் கார் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தின் பயன் மேலும் விரிவடைகிறது.

Hyundai Bayon

ஓட்டுனர் செயல்பாடுகளுக்கும் மதிப்பீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூலிங்க் தொழில்நுட்பம் மூலம் காரின் பயன்பாடு மற்றும் ஓட்டுனர் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். கடந்த மூன்று மாதங்களில் பதிவான வாகனப் பயன்பாட்டின் அடிப்படையில் ஓட்டுனர் எவ்வாறு ஓட்டுகிறார் என்பதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். இதன் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு கட்டணத்தில் சலுகைகளை நிர்ணயிக்கும்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க காரில் தனியாகக் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே காரில் உள்ள புளூலிங்க் தொழில்நுட்பம் வாயிலாகவே தேவையான தரவுகள் சேகரிக்கப்படும். இருப்பினும், வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் மட்டுமே அவர்களது ஓட்டுனர் மதிப்பெண்கள் காப்பீட்டு நிறுவனங்களுடன் பகிரப்படும்.

Hyundai Car

எந்தெந்த விஷயங்கள்?

கார் ஓட்டும்போது திடீரென வேகத்தை அதிகரித்து ஓட்டுதல், வேகம் குறைக்கப்படும் விதம், எவ்வாறு பிரேக்கிங் பிடிக்கின்றனர், வேகக் கட்டுப்பாடு மற்றும் வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சின் இயங்கும் நேரம் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பாதுகாப்பான ஓட்டுனர் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Also Read

சலுகை விபரம்

இந்தத் திட்டத்தில் ஓட்டுனர் மதிப்பெண் 70 அல்லது அதற்கு மேல் இருந்தால் காப்பீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி கிடைக்கும். இருப்பினும், இந்த மதிப்பெண் மட்டுமே சலுகையை உறுதிப்படுத்தாது. சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகள், தகுதி மற்றும் மதிப்பீட்டைப் பொறுத்தே இறுதிச் சலுகை வழங்கப்படும்.

Hyundai Bayon

15% வரை பிரீமியம் தள்ளுபடி

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கார் காப்பீட்டின் சொந்த சேதத்திற்கான பிரீமியத்தில் (Own Damage Premium) அதிகபட்சம் 15% வரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், இது மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் வழங்கப்படும் தள்ளுபடி கிடையாது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read

புளூலிங்க் செயலியில் மதிப்பெண்

ஹூண்டாய் புளூலிங்க் செயலி (Bluelink App) மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஓட்டுனர் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ள முடியும். காப்பீட்டைப் புதுப்பிக்க இன்னும் 90 நாட்களுக்குள் இருக்கும் வாடிக்கையாளர்கள் மதிப்பெண்ணைப் பார்த்து, தங்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளை மதிப்பீடு செய்ய முடியும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளைப் பின்பற்றி முன்னேற்றத்தை பெற முடியும்.

மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்பு

ஹூண்டாய் இந்தியா இன்சூரன்ஸ் புரோக்கிங் (HIIB) நிறுவனம் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. ஆரம்பகட்டமாக சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

ஹூண்டாய் புளூலிங்க் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூலிங்க் வசதியுடன் இணைக்கப்பட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் பயன்பாட்டில் உள்ளன. வரும் 2027ம் ஆண்டுக்குள் 10 லட்சம் மொபைல்போன் அப்ளிகேஷனுடன் இணைக்கப்பட்ட கார்களையும், 2030ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கார்களையும் எட்டுவதற்கு நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய காப்பீட்டுத் திட்டம் இந்த வளர்ச்சிக்கு மேலும் உதவும்.

என்ன பயன்?

இதுவரை காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயிப்பதில் வாகனத்தின் விபரங்கள் மற்றும் பிற வழக்கமான காரணிகள் முக்கியப் பங்கு வகித்தன. தற்போது ஓட்டுனரின் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது புதிய மாற்றமாக இருக்கும். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது பழக்கத்தின் மூலம் காப்பீட்டுச் செலவைக் குறைக்க வாய்ப்புள்ளது.

கார் பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு என்ற ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய முயற்சி, மொபைல்போன் ஆப் மூலமாக இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றுகிறது. பாதுகாப்பான ஓட்டுனர் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், காப்பீட்டுச் செலவுகளைக் குறைக்கவும் வாய்ப்பளிக்கிறது. எதிர்காலத்தில் மற்ற கார் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தலாம்.

Article Published On: Thursday, November 5, 2026, 17:32 [IST]
English summary
Hyundai usage based car insurance bluelink india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X