அசத்தலான வசதிகளுடன் புத்தம் புதிய காரை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்.. இந்த வசதியை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களின் நைட் எடிஷனை (Knight Edition) வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஹூண்டாய். அந்த வகையில் கடந்தாண்டு அப்டேட் செய்யப்பட்ட வென்யூ (Venue) சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் நைட் எடிஷனை தற்போது வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். காஸ்மெடிக்காக பல்வேறு மாற்றங்கள் இந்த நைட் எடிஷனில் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தவிர்த்து வென்யூ லைன்-அப்பிற்கு சில கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களையும் கொடுத்து அப்டேட் செய்துள்ளது ஹூண்டாய்.
இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் எஸ்யூவிக்களில் ஒன்றாக இருந்து வருகிறது வென்யூ. 2022ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ஹூண்டாயின் நைட் எடிஷன் மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதுவரை சுமார 92,000 நைட் எடிஷன் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹூண்டாய். இதன் காரணமாக வென்யூவின் நைட் எடிஷனையும் தற்போது வெளியிட்டுள்ளது. புதிய வென்யூ நைட் எடிஷன் மாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை இங்கே நாம் பார்க்கலாம்.

நைட் எடிஷன் சிறப்பம்சங்கள்:
ஹூண்டாய் நைட் எடிஷனின் சிறப்பம்சமே அதன் கருப்பு நிற தீம் தான். புதிய வென்யூ நைட் எடிஷன் மாடலும் முழுமையான கருப்பு நிற தீமையே கொண்டிருக்கிறது. வெளிப்புறம் முன்பக்க கிரில்லில் தொடங்கி, ஹூண்டாய் லோகோ, ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் மற்றும் அலாய் வீல்கள் என எல்லா டிசைன் அம்சங்களுமே இந்த நைட் எடிஷனில் கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதில் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் மட்டும் தனித்துத் தெரிகிறது. இத்துடன் நைட் எடிஷன் என்பதைக் குறிப்பிடும் வகையிலான நைட் பேட்ஜிங்கும் காரில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் மட்டுமின்றி, காரின் உட்புறத்தையும் முழுவதுமாக கருப்பு நிறத்தாலேயே அலங்கரித்திருக்கிறது ஹூண்டாய். சீட்கள் தொடங்கி, டேஷ்போர்டு, சைடு பேனல்கள் வரை எல்லாமே கருப்பு நிறத்திலேயே இருக்கிறது. இத்துடன் கண்ட்ராஸ்டாக பிராஸ் நிறத இன்ஸர்ட்களும் காரின உட்புறம் கொடுக்கப்பட்டுள்ளன.

வென்யூ எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்:
இந்த நைட் எடிஷனின் வெளியீட்டுடன், ஸ்டாண்டர்டான வென்யூ எஸ்யூவி மாடலின் குறிப்பிட்ட வேரியன்ட்களில் மட்டும் டேஷ்கேம் வசதியைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது ஹூண்டாய். HX6T, HX10 மற்றும் N10 என ஆகிய மூன்று வேரியன்ட்களில் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவிங், ரெக்கார்டிங், வெகேஷன் மோடு என பல்வேறு ரெக்கார்டிங் மோடுகளையும், மொபைல் செயலி மூலம் வீடியோ டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியும் இந்த டேஷ்கேமில் உள்ளது.
இந்த வசதியைத் தவிர்த்து, ஸ்டாண்டர்டு வென்யூ லைன்-அப்பிற்கு இரண்டு புதிய நிறங்களையும் கொடுத்துள்ளது ஹூண்டாய். ஹெசல் ப்ளூ மேட் (Hazel Blue Matte) மற்றும் மிஸ்டிக் சஃபைர் மேட் (Mystic Sapphire Matte) ஆகிய இரண்டு புதிய மற்றும் தனித்துவமான நிறங்களிலும் இந்த வென்யூ எஸ்யூவியை நாம் வாங்கலாம்.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை. அதோ 1.2 லிட்டர் NA பெட்ரோல் (மேனுவல்), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (DCT ஆட்டோமேட்டிக்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்) ஆகிய இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் தான்.
விலை:
வென்யூ நைட் எடிஷன் மாடலை ஐந்து ட்ரிம்களான நாம் வாங்கலாம். அவற்றின் விலைகள் பின்வருமாரு.
HX5 பெட்ரோல் மேனுவல் - ரூ.9.69 லட்சம்
HX5 டீசல் மேனுவல் - ரூ.11.11 லட்சம்
HX6T பெட்ரோல் மேனுவல் - ரூ.11.03 லட்சம்
HX8 டீசல் ஆட்டோமேட்டிக் - ரூ.13.84 லட்சம்
HX10 டர்போ பெட்ரோல் DCT - ரூ.14.79 லட்சம்
(விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே)
டேஷ்கேம் வசதியுடன் கூடிய ஸ்டாண்டர்டு வென்யூ வேரியன்ட்களின் விலைகள் பின்வருமாரு.
HX6T பெட்ரோல் மேனுவல் - ரூ.10.88 லட்சம்
HX10 டர்போ பெட்ரோல் DCT - ரூ.14.64 லட்சம்
HX10 டீசல் ஆட்டோமேட்டிக் - ரூ.15.64 லட்சம்
(விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே)
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிறப்பு எடிஷன் மாடலுடன், சில கூடுதல் வசதிகளையும் ஸ்டாண்டர்டு மாடலுக்குக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். டேஷ்கேம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு வரவேற்க்கப்பட வேண்டிய வசதியும் கூட. தனித்துவமான லுக்குடன் கூடிய கார் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் வென்யூ நைட் எடிஷன் வேரியன்ட்களை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








