லிட்டருக்கு 23கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்! எது நடக்க கூடாதுனு நெனைச்சோமோ அது நடந்துடுச்சு!

By Staff

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் தனது வென்யூ (Venue) சப்-4-மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவி காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலைகளை மாற்றியமைத்துள்ளது. ஹூண்டாய் வென்யூ காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களின் விலைகள், அவற்றின் ட்ரிம் மற்றும் என்ஜின் வகையைப் பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை (எக்ஸ்-ஷோரூம்) தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்ச விலை உயர்வாக ஹூண்டாய் வென்யூ காரின் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட எச்.எக்ஸ்5 (HX5) மேனுவல் வேரியண்டின் விலை ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.9.55 லட்சமாக உயர்ந்துள்ளது. 88 எச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறனை வழங்கும் 1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் கொண்ட மற்ற வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

hyundai venue price hike

ஹூண்டாய் வென்யூ காரின் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்கள் வரிசையில், விலை மாற்றங்கள் டிசிடி (DCT) கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். எச்.எக்ஸ்5 டிசிடி மற்றும் எச்.எக்ஸ்6 டிசிடி ட்ரிம்களின் விலை தலா ரூ.9,000 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், உயர் ரக வேரியண்டான எச்.எக்ஸ்8 டிசிடி வேரியண்டின் விலையில் ரூ.5,000 என்கிற சிறிய அளவிலான விலை உயர்வு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற டிசிடி வேரியண்ட்கள் மற்றும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட அனைத்து மேனுவல் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் எந்த உயர்வும் இல்லை. வென்யூ காரின் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எனஜி்ன் அதிகபட்சமாக 120எச்பி பவர் மற்றும் 172என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

hyundai venue price hike

இந்த காரின் 1.5-லிட்டர் டீசல் வேரியண்ட்கள் மிகவும் சீரான விலை உயர்வைப் பெற்றுள்ளன. குறிப்பாக எச்.எக்ஸ்2 டீசல் மேனுவல், எச்.எக்ஸ்5 டீசல் மேனுவல், எச்.எக்ஸ்5 டீசல் ஆட்டோமேட்டிக், எச்.எக்ஸ்7 டீசல் மேனுவல் மற்றும் எச்.எக்ஸ்7 டீசல் மேனுவல் டூயல்-டோன் ஆகிய ட்ரிம்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் கொண்ட மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் மாறாமல் அப்படியே தொடர்கின்றன.

ஹூண்டாய் வென்யூ காரின் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 116எச்பி பவர் மற்றும் 250என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. ஸ்போர்ட்டியர் மாடலான ஹூண்டாய் வென்யூ என்-லைன் (N-Line) விலையில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்ந்து ரூ.10.65 லட்சம் முதல் ரூ.15.58 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில வேரியண்ட்களின் விலையில் மாற்றங்கள் இருந்தபோதிலும், வழக்கமான ஹூண்டாய் வென்யூ தொடர்ந்து ரூ.8 லட்சம் முதல் ரூ.15.69 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ஹூண்டாய சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆனது சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஃபிரான்க்ஸ் (Fronx), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) போன்ற முன்னணி கார்களுக்கு நேரடிப் போட்டியாகத் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 28, 2026, 13:00 [IST]
English summary
Hyundai venue price hike india variants increased cost revealed check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+