அண்ணன் அடிபட்ட நிலையில் தம்பி செய்த தரமான சம்பவம்! ஆனந்த கண்ணீரில் ஹூண்டாய் நிறுவனம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 10,776 ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 6,858 ஹூண்டாய் வெனியூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 3,918 ஹூண்டாய் வெனியூ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் 57.13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars June 2026), ஹூண்டாய் வெனியூவிற்கும் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே டாடா பன்ச், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகியவை உள்ளன.

இந்த வரிசையில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் வெனியூ பிடித்துள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ காரின் சந்தை பங்கு (Market Share) 6.91 சதவீதம் ஆகும். ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய தலைமுறை மாடலின் வருகைதான், ஹூண்டாய் வெனியூ காரின் சிறப்பான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7,99,900 ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15,82,700 ரூபாயாக உள்ளது. இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் செயல்திறன் மிக்க வெர்ஷனை 'என் லைன்' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10,66,100 ரூபாயாக உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15,66,700 ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்துமே ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
ஹூண்டாய் வெனியூ காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. மறுபக்கம் ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் வெனியூ மற்றும் அதன் என் லைன் என 2 வெர்ஷன்களிலும், லெவல் 2 அடாஸ், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா கண்டிப்பாக இடம் பிடிக்கும். ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாங்களை சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தின் தொழிற்சாலையில் மே மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஜூன் மாதம் ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விற்பனையும் குறைந்தது. இருப்பினும் க்ரெட்டாவிற்கு பதிலாக வெனியூ இந்த பட்டியலில் இடம் பிடித்து ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஆறுதல் தந்து விட்டது. ஹூண்டாய் வெனியூ காரை 'பேபி க்ரெட்டா' என அழைப்பார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications