ஹூண்டாய் வெர்னா காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்... பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் அசத்தல்!

இந்தியாவில் கார் வாங்கும்போது மைலேஜ், விலை, வசதிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் அனைத்து நிறுவனங்களும் இப்போது பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், நடுத்தர செடான் கார் பிரிவில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் வெர்னா கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறந்த மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா செடான் கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய மோதல் சோதனையில் அதிகபட்சமாக 5 நட்சத்திரப் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது வெர்னா வாங்க திட்டமிட்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Hyundai Verna

பாரத் என்சிஏபி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, ஹூண்டாய் வெர்னா கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் (Adult Occupant Protection) மொத்தமுள்ள 32 புள்ளிகளில் 28.22 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்த காருக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பிரிவிலும் (Child Occupant Protection) வெர்னா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மொத்தமுள்ள 49 புள்ளிகளில் 44 புள்ளிகளைப் பெற்று 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதனால் காரில் பயணிக்கும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளின் பாதுகாப்பிலும் இந்த மாடல் கவனம் செலுத்தியிருப்பது தெரியவருகிறது.

இந்தச் சோதனைக்காக ஹூண்டாய் வெர்னா காரின் HX8 1.5 Turbo DCT மற்றும் HX8 1.5 Petrol CVT ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு வேரியண்ட்டுகளின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் கிடைத்த 5 நட்சத்திர மதிப்பீடு, வெர்னா காரின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெர்னா காரை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அடிப்படை வேரியண்ட்டை தேர்வு செய்தாலும் பாதுகாப்பு மதிப்பீட்டில் அதே ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற முடியும்.

நடுத்தர செடான் கார் பிரிவில் ஹூண்டாய் வெர்னாவுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஆகிய கார்களும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. ஆனால் அவை குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பில் சோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read

நடுத்தர செடான் கார் மார்க்கெட்டில் மற்றொரு முக்கிய போட்டியாளராக உள்ள ஹோண்டா சிட்டி கார் இதுவரை கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு உட்படுப்படவில்லை. இந்நிலையில், பாரத் என்சிஏபி அமைப்பில் சோதனை செய்யப்பட்ட முதல் நடுத்தர செடான் காராக வெர்னா இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தப் பிரிவில் பாதுகாப்பு ஒப்பீட்டுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஹூண்டாய் வெர்னா காருக்கு பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு கிடைப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2023ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி நடத்திய சோதனையிலும் இந்த கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பிரிவுகளில் தலா ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருந்தது.

Also Read

அந்தச் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 28.18 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளையும் வெர்னா பெற்றிருந்தது. தற்போது இந்தியாவின் சொந்த பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பிலும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருப்பது இந்த மாடலின் முக்கிய விஷயமாக இருக்கும்.

ஹூண்டாய் வெர்னா காருக்கு பாரத் என்சிஏபி அமைப்பில் கிடைத்துள்ள ஐந்து நட்சத்திர மதிப்பீடு, நடுத்தர செடான் பிரிவில் அதிக போட்டியை உருவாக்குவதுடன் ஹூண்டாய் வர்த்தகத்திலும், விற்பனையிலும் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக பாதுகாப்பை முதன்மையாகக் கருதும் குடும்ப வாடிக்கையாளர்களுக்கு இந்த முடிவு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.

Article Published On: Wednesday, November 18, 2026, 14:45 [IST]
English summary
Hyundai verna bharat ncap 5 star safety rating crash test results
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out