ஹூண்டாயின் 7 சீட்டர் கிரெட்டா.. ரொம்ப காலமா நீங்க எதிர்பார்த்த கார் இது தானா?

இப்போது 7 சீட்டர் கார்களை வாங்க நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் 7 சீட்களை அவை கொண்டிருப்பது அதற்கு முக்கியக் காரணம். ஆட்கள் இல்லாத நேரங்களில் அதனை லக்கேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக காரணங்களினால் 7 சீட்டர் கார்களை, குறிப்பாக 7 சீட்டர் எஸ்யூவிக்களை இப்போது வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஒரு சூப்பரான 7 சீட்டர் எஸ்யூவி குறித்த தகவல்களைத் தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். அது வேறெதுவும் இல்லை, ஹூண்டாயின் அல்கஸார் எஸ்யூவி தான். வென்யூவை பேபி கிரெட்டா என அழைப்பதைப் போலவே, இந்த அல்கஸாரை 7 சீட்டர் கிரெட்டா என நாம் அழைப்பதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டது.

Hyundai Alcazar

5 சீட்டர் பிரிவில் கிரெட்டாவிற்கு இணையான விற்பனையை வேறு எந்தக் காரும் இதுவரை செய்யவில்லை. ஆனால், 7 சீட்டர் பிரிவில் அல்கஸாரை அப்படிச் சொல்ல முடியாது. இந்தியாவில் மிகவும் குறைவான விற்பனையையே இந்தக் கார் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் 1,000 யூனிட்டுகளுக்கும் கீழாகவே இந்தக் கார் விற்பனையாகி வருகிறது.

மறுபுறம் கிரெட்டாவோ ஒவ்வொரு மாதமும் 15,000 யூனிட்டுகள் முதல் 20,000 யூனிட்டுகள் வரை விற்பனையாகி வருகிறது. விரைவில் கிரெட்டாவின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனையும் ஹூண்டாய் வெளியிடவுள்ளது. இதன் வெளியீட்டிற்குப் பிறகு 20,000-த்திற்கும் மேலான விற்பனையை ஒவ்வொரு மாதமும் கிரெட்டா பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Alcazar

அல்கஸார் சிறப்பான எஸ்யூவியாகவே இருந்தாலும், சற்று கூடுதலான விலை காரணமாக குறைவான விற்பனை பதிவு செய்யலாம் எனத் தெரிகிறது. எக்ஸிக்யூட்டிவ், பிரஸ்டீஜ், கார்ப்பரேட், பிளாட்டினம், சிக்னேச்சர் மற்றும் சிக்னேச்சர் நைட் என ஆறு வேரியன்ட்களாக இந்த 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கார் 14.50 லட்சம் ரூபாய் முதல் 21.25 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் காரில் இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். ஒன்று 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றொன்று 1.5 லிட்டர் டர்போ டீசல். டர்போ பெட்ரோல் இன்ஜினானது 160 hp பவர் மற்றும் 253 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டுள்ளது.

1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினானது 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை ஹோண்டா கொடுத்துள்ளது. இரண்டுமே ஃபிரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் தான்.

7 சீட்டர் எஸ்யூவி எனக் கூறினாலும், 6 சீட்டர் வடிவிலும் இந்த எஸ்யூவியை நாம் வாங்கலாம். 6 சீட்டர் என்றால் இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்டாக இல்லாமல், இரண்டு பேர் மட்டும் அமரும் வகையில் கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மூன்றாம் வரிசையில் இரண்டு பேர் அமரும் வகையிலான பென்ச் சீட் தான்.

இந்த எஸ்யூவியின் உட்புறம் டூயல் டோன் இன்டீரியர் கொடுக்கப்பட்டிருப்பதோடு, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வாய்ஸ் ஆக்டிவேட்டட் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட வசதிகளையும் கொடுத்துள்ளது ஹூண்டாய்.

பாதுகாப்பிற்காக ADAS பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், 360 டிகிரி கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆறு ஏர்பேக்குகள், எலெட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. டாடா சஃபாரி, மஹிந்திரா XUV 7XO மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் உள்ளிட்ட 7 சீட்டர் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹூண்டாய் அல்கஸார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் கிரெட்டா கார் உங்களுக்குப் பிடித்திருந்து, 7 சீட்டர் ஆப்ஷன் வேண்டும் என்பதால் வேறு காரைப் பார்க்கிறீர்கள் என்றால் இந்த அல்கஸாரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது இந்தக் காரை சிறப்பாகவே ஹூண்டாய் வடிவமைத்துள்ளது. மற்ற காரை வாங்கும் முன் இந் 7 சீட்டர் கிரெட்டாவையும் ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்களேன்.

Article Published On: Monday, June 29, 2026, 15:24 [IST]
English summary
Hyundais 7 seater creta the alacazar suv features and other details explained
மேலும்... #hyundai #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out