இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடா, மஹிந்திரா பொழப்புல மண்ணை அள்ளி போட போகும் ஹூண்டாய்!

இந்திய சந்தைக்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வெகு சமீபத்தில் வெளியிட்டது. இதில், ஏராளமான கார்கள், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும் ஒரு கார் மட்டும், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை வெகுவாக அதிகரிக்க செய்துள்ளது.

அது சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இது வரவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Hyundai Inster

பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கவுள்ள புதிய எலெக்ட்ரிக் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படவுள்ளன. இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதன் காரணமாக குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) ஆகிய அமைப்புகளின் மோதல் சோதனைகளில் இந்த எலெக்ட்ரிக் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Hyundai Inster Side Design

லெவல் 2 அடாஸ் தவிர, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளும், இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை 42 kWh மற்றும் 49 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300-400 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சர்வதேச சந்தைகளில் ஹூண்டாய் நிறுவனம் இன்ஸ்டர் என்ற எலெக்ட்ரிக் காரை (Hyundai Inster EV) விற்பனை செய்கிறது. அதன் டிசைன் அம்சங்கள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலோ விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 12 அல்லது 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது.

தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும். இவற்றின் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் விலை முறையே 18.02 லட்ச ரூபாய் ஆகவும், 55.70 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மீது ஏன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் கார் He1i என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் புதிய பெயர் சூட்டப்படும்.

Article Published On: Thursday, May 14, 2026, 11:58 [IST]
English summary
Hyundais most affordable electric suv india launch soon expected price range safety features
மேலும்... #hyundai #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+