அமெரிக்கா, ஜெர்மனியை கதற விட்ட இந்தியா! சீனா, ஜப்பானுக்கு இப்பவே உள்ளுக்குள்ள பயம் வந்திருக்கும்!

பல்வேறு துறைகளிலும் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும். உலகில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 53,79,099 கார்களை இந்தியா உற்பத்தி செய்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் கடந்த 2025ம் ஆண்டில் அதிக கார்களை உற்பத்தி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா (China) ஆகும். கடந்த 2025ம் ஆண்டில் சீனா ஒட்டுமொத்தமாக 3,02,69,903 கார்களை உற்பத்தி செய்துள்ளது.

Narendra Modi

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 42 சதவீத வளர்ச்சி ஆகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் ஜப்பான் (Japan) 2வது இடத்தில் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் ஜப்பான் ஒட்டுமொத்தமாக 72,07,025 கார்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீத வீழ்ச்சி ஆகும்.

உலகின் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களின் தாயகமாக இருக்கும் ஜெர்மனி (Germany), தென் கொரியா (South Korea) மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இந்த பட்டியலில் இந்தியாவிற்கு பின்னால்தான் உள்ளன. இதில், ஜெர்மனிதான் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் தாய் நாடு ஆகும்.

MK Stalin In Thoothukudi VinFast Factory

மறுபக்கம் ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) போன்ற நிறுவனங்களின் தாய் நாடாக தென் கொரியா உள்ளது. அதே நேரத்தில் ஃபோர்டு (Ford), ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors) மற்றும் டெஸ்லா (Tesla) போன்ற நிறுவனங்களின் தாய் நாடாக அமெரிக்கா இருக்கிறது. இருப்பினும் இந்த நாடுகளை காட்டிலும் அதிக கார்களை கடந்த 2025ம் ஆண்டில் இந்தியா உற்பத்தி செய்துள்ளது.

இதற்கு மத்திய அரசின் கொள்கைககள் முக்கிய காரணம் ஆகும். இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தரப்பில் மானியம் (Production Linked Incentive - PLI) வழங்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வதை பல்வேறு நிறுவனங்களும் விரும்புகின்றன. மேலும் இந்தியாவில் கார் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகளையும் மத்திய அரசு அதிகரித்து வருகிறது.

அதாவது தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் போன்றவை அதிகளவில் கட்டமைக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் வந்து சேர்வதும், உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்வதும் எளிதாக உள்ளது. அத்துடன் துறைமுக வசதிகளும் சிறப்பான முறையில் இருப்பதால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதும் எளிமையான ஒரு விஷயமாகவே இருக்கிறது.

இது போன்ற காரணங்களால்தான் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் விரும்புகின்றன. இந்தியாவின் இந்த சாதனைக்கு தமிழ்நாடு முக்கியமான காரணம் ஆகும். ஏனெனில் ஹூண்டாய், ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan), வின்ஃபாஸ்ட் (VinFast) மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற பல்வேறு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

சரி, உலகின் மற்ற முன்னணி நாடுகள் எவ்வளவு கார்களை உற்பத்தி செய்துள்ளன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். 41,48,836 கார்களை உற்பத்தி செய்து, கடந்த 2025ம் ஆண்டு அதிக கார்களை உற்பத்தி செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஜெர்மனி 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜெர்மனியின் கார் உற்பத்தி 11 சதவீதம் குறைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் தென் கொரியா 5வது இடத்திலும் (38,44,338 கார்கள் உற்பத்தி, 6 சதவீத வளர்ச்சி), பிரேசில் 6வது இடத்திலும் (19,90,031 கார்கள் உற்பத்தி, 19 சதவீத வீழ்ச்சி), ஸ்பெயின் 7வது இடத்திலும் (18,10,331 கார்கள் உற்பத்தி, 20 சதவீத வீழ்ச்சி) உள்ளன. அதே நேரத்தில் செக் குடியரசு 8வது இடத்தில் (14,45,776 கார்கள் உற்பத்தி, 1 சதவீத வளர்ச்சி) உள்ளது.

இந்த வரிசையில் அமெரிக்காவிற்கு 9வது இடம் (12,79,247 கார்கள் உற்பத்தி, 49 சதவீத வீழ்ச்சி) மட்டுமே கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு ட்ரம்ப (Donald Trump) அமெரிக்காவில் கார்களின் உற்பத்தியை அதிகரிக்க தற்போது தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதற்கிடையே இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஸ்லோவாகியா (10,70,000 கார்கள் உற்பத்தி, 3 சதவீத வீழ்ச்சி) பிடித்துள்ளது. OICA தளத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. OICA என்பது வாகன உற்பத்தி நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த 2025ம் ஆண்டு அதிக கார்களை உற்பத்தி செய்த டாப் 10 நாடுகளின் பட்டியலில், அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்திருப்பது இந்தியாதான். இந்தியா அளவிற்கு வேறு எந்தவொரு நாடும் அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்யவில்லை. இந்தியாவில் கார் உற்பத்தி வேகமாக உயர்ந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.

Article Corrections

தலைப்பில் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளது.
Article Published On: Tuesday, June 9, 2026, 6:30 [IST]
English summary
India beats jermany us south korea in 2025 car production thanks to pli scheme infra development
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out