இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்கள் மற்றும் பைக் மாடல்கள் லிஸ்ட்!

இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் கொண்ட E100 எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிப்பு, கடந்த 23ந் தேதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் E85 மற்றும் E100 எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களுக்கான விதிமுறை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் E85 எரிபொருளை பயன்படுத்தும் சான்றுடன் விற்பனையில் உள்ளன. ஆனால், சில வாகனங்கள் இந்த புதிய E100 எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், E85 எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார், பைக் மாடல்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Flex Fuel Wagon R

மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோஃப்ளெக்ஸ்

இந்தியாவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்களில் முக்கியமானதாக மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோஃப்ளெக்ஸ் உள்ளது. இது E20 முதல் E100 வரையிலான எத்தனால் கலவை எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய விதிமுறைகளின்படி இதன் சான்றுபடி, இந்த காரில் E85 எரிபொருளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

இந்த காருக்கு ரூ.7.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் வணிக மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் தொடங்கிவிட்டது. ஆனாலும், விற்பனை மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ளது. தற்போது இந்த வாகனங்களுக்காக மோட்டார் வாகனச் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வரும் காலத்தில் விற்பனை மெதுவாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Splendor Flex Fuel

ஹீரோ ஸ்பிளெண்டர்+ மற்றும் எச்எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிளெண்டர்+ மற்றும் எச்எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 97.2 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இவை E20 முதல் E85 வரையிலான எத்தனால் கலவை எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டர்+ ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலின் அறிமுக விலையாக ரூ.82,710 என்றும், எச்எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலின் விலை ரூ.72,792 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடும்போது விலை வேறுபாடு குறைவாக இருந்தாலும், எரிபொருள் கிடைக்கும் வசதியைப் பொறுத்தே இவற்றின் நடைமுறைப் பயன்பாடு அமையும். ஆரம்பத்தில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பகுதிகளில் விற்பனை தொடங்கப்பட்டது.

Also Read

சுஸுகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250 ஃப்ளெக்ஸ் ஃப்யூவல்

சுஸுகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250 ஃப்ளெக்ஸ் ஃபியூவல் பைக் கடந்த ஆண்டு ஜனவரியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 249 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. E85 வரையிலான எத்தனால் கலவை எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய விலை சுமார் ரூ.1.98 லட்சம் எனக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், நகரம் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து விலை மாறலாம்.

Splendor Flex Fuel

யமஹா எஃப்இசட் ப்ளூ ஃப்ளெக்ஸ்

யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் ப்ளூ ஃப்ளெக்ஸ் மாடலும் E85 வரையிலான எத்தனால் கலவையைப் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.1,24,240 எனக் குறிப்பிடப்படுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ப்ளூ ஸ்கொயர் விற்பனை நிலையங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், வழக்கமான எஃப்இசட் மாடலுடன் ஒப்பிடும்போது இதன் விலை அதிகம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. மேலும், எஞ்சின் செயல்திறன் மற்றும் தரை இடைவெளியிலும் மாற்றங்கள் உள்ளன. எனவே, வாங்குவதற்கு முன்பு வாகனத்தின் தொழில்நுட்ப விவரங்களையும், அருகிலுள்ள E85 எரிபொருள் நிலையங்களையும் சரிபார்ப்பது அவசியம்.

E85 எரிபொருள் நிலையங்கள்

தற்போது E85 எரிபொருள் கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் 48 சில்லறை விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் டிசம்பருக்குள் சுமார் 500 நிலையங்களாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 5,000 நிலையங்களாகவும் விரிவுபடுத்த இலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் E85 லிட்டருக்கு ரூ.82.12 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சோதனையில் E20 உடன் ஒப்பிடும்போது எரிபொருள் சிக்கனம் 24.4 சதவீதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எத்தனால் விலை குறைவாக இருந்தாலும், மைலேஜும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுவதால், வாகன உரிமையாளர்களுக்கு அது உண்மையான சேமிப்பாக கருத முடியாது.

அதேநேரத்தில், நாடுமுழுவதும் பரவலாக இந்த E85 மற்றும் E100 எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இந்த வாகனங்களை வாங்குவது குறித்து பரிசீலிக்க முடியும். மேலும், இந்த எத்தனால் வாகனங்களை E20 எரிபொருளில் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

Article Published On: Tuesday, October 27, 2026, 16:57 [IST]
English summary
India flex fuel cars bikes e20 and e85 models price
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X