மாருதியில் பலர் கண்மூடித்தனமாக வாங்கும் 3 ஹேட்ச்பேக் கார்கள்... டாடா கார் 7வது இடத்தில்!
இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை எப்போதுமே உச்சத்தில் இருக்கும் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த வகையில் கடந்த 2026 மே மாதத்திலும் மூன்று ஹேட்ச்பேக் கார் மாடல்கள் 17 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து, கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குவதற்கு முக்கிய காரணமே அந்த நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் அதிக ஹேட்ச்பேக் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுவது தான். கடந்த மே மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் லிஸ்ட்டில் ஆறு மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்கள் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சொல்லப்போனால், இந்த லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருப்பது மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்களே ஆகும். இந்த வகையில் முதலிடத்தில் இருப்பது, மாருதி சுஸுகி பலேனோ ஆகும். கடந்த மே மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 398 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் வெறும் 11,618 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் பலேனோ கார்களின் விற்பனை 58% அதிகரித்துள்ளது. இதேபோல், 2025 மே மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 949 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த வேகன்ஆர் இந்த ஆண்டு மே மாதத்தில் 18 ஆயிரத்து 76 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் உள்ளது.

இந்த வகையில் பார்த்தால், வேகன்ஆர் கார்களின் விற்பனை 30% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் 17 ஆயிரத்து 519 யூனிட்கள் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளது. அதுவே, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையாகி இருந்த ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 135 யூனிட்கள் மட்டுமே ஆகும்.
இவை மூன்றும் தான் கடந்த மாதத்தில் 17 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையான டாப்-3 ஹேட்ச்பேக் கார் மாடல்கள் ஆகும். இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ளவை 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அந்த வகையில், 4வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 887 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
| Hatchback Model | May-26 | May-25 | Diff | % Change YoY |
| Maruti Suzuki Baleno | 18,398 | 11,618 | 6,780 | 58.36 |
| Maruti Suzuki WagonR | 18,076 | 13,949 | 4,127 | 29.59 |
| Maruti Suzuki Swift | 17,519 | 14,135 | 3,384 | 23.94 |
| Maruti Suzuki Alto | 9,887 | 4,970 | 4,917 | 98.93 |
| Maruti Suzuki S-Presso | 6,388 | 1,806 | 4,582 | 253.71 |
| Hyundai i20 | 4,749 | 4,090 | 659 | 16.11 |
| Tata Tiago | 4,178 | 6,407 | -2,229 | -34.79 |
| Toyota Glanza | 3,198 | 4,753 | -1,555 | -32.72 |
| Maruti Suzuki Celerio | 3,018 | 1,861 | 1,157 | 62.17 |
| Hyundai Grand i10 Nios | 2,920 | 4,344 | -1,424 | -32.78 |
| Total | 88,333 | 67,933 | 20,400 | 30.03 |
ஆனால், இதில் பாதியாக 2025 மே மாதத்தில் வெறும் 4 ஆயிரத்து 970 ஆல்டோ கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. ஆல்டோ ஆவது பரவாயில்லை... இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை பிடித்துள்ள மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் வெறும் ஆயிரத்து 806 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், நடப்பாண்டு மே மாதத்தில் 6 ஆயிரத்து 388 எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனையாகி உள்ளன. இவற்றிற்கு அடுத்து 6வது இடத்தில் 4 ஆயிரத்து 749 யூனிட்கள் விற்பனை உடன் ஹூண்டாய் ஐ20 உள்ளது. அதாவது, மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மாற்று நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் என்றால், அது ஹூண்டாய் ஐ20 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிமிர்ந்த எஸ்யூவி கார்களுக்கும், தாழ்வான செடான் கார்களுக்கும் இடைப்பட்டதாக ஹேட்ச்பேக் ரக கார்கள் விளங்குகின்றன. இத்தகைய ஹேட்ச்பேக் கார் மாடல்களுள் தற்போதைக்கு பலரின் பிரதான தேர்வாக இருப்பது, மாருதி சுஸுகியின் பலேனோ, வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் தான் என்பது இந்த தொகுப்பின் மூலமாக அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications