மஹிந்திரா வந்துடுச்சுனா டாடா எல்லாம் காலி ஆகிடும் போலயே! பேட்டரி காரை ரோட்டில் அதிகம் பார்க்க இதுதான் காரணம்!!

2026ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில், இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தை ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்து 42 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 ஜனவரியில் விற்பனையான 11,909 எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் 51 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் (19,195 யூனிட்கள்), ஆகஸ்ட் (18,563 யூனிட்கள்) மாதங்களின் பதிவான விற்பனை எண்ணிக்கைகளுக்கு அடுத்து, கடந்த 2026 ஜனவரி ஆனது மூன்றாவது சிறந்த விற்பனை மாதமாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், 2026ஆம் ஆண்டில் 2 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்கிற மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.

india s electric car brands 2026 january sales numbers

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முன்னிலை வகிக்கிறது. கடந்த ஜனவரியில் 7,852 எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டில் விற்பனை செய்து, கடந்த ஆண்டின் இதே ஜனவரி மாதத்தை விட 48 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம், எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் டாடாவின் சந்தைப் பங்கு 43.52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நெக்ஸான் இவி (Nexon EV), பன்ச் இவி (Punch EV) மற்றும் டியாகோ இவி (Tiago EV) ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றின. ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம், கடந்த மாதத்தில் இரண்டாவது பெரிய எலெக்ட்ரிக் கார் விற்பனையாளர் என்கிற தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

india s electric car brands 2026 january sales numbers

இந்த நிறுவனம் 4,606 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த போதிலும், அதன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 2 சதவிகிதமாகக் குறைவாகவே உள்ளது. ஏனெனில், 2025 ஜனவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி விற்பனை செய்திருந்தது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பு வரிசையை வின்ட்சர் இவி (Windsor EV), எம்9 (M9) மற்றும் சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் கார் ஆகியவற்றுடன் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மிக வேகமாக வளரும் முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 2026 ஜனவரியில் 3,589 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ள இந்த நிறுவனம், கடந்த ஆண்டு ஜனவரியில் வெறும் 739 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்றிருந்த நிலையில், வியக்கத்தகு 386 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

india s electric car brands 2026 january sales numbers

இதனால், மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் சந்தைப் பங்கு 6 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) போன்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடல்கள் மஹிந்திராவின் இந்த விற்பனை உயர்வுக்குப் பெரிதும் துணை புரிகின்றன. புதிய போட்டியாளரான வின்ஃபாஸ்ட் (VinFast), இந்திய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரியில் 432 எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்ததன் மூலம், இந்தியாவில் தனது நான்காவது மாதத்திலேயே குறிப்பிடத்தக்க 2 சதவிகித சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. இந்தோனேசியா போன்ற பிராந்தியங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 (VF7) ஆகிய மாடல்கள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

Carmaker Jan 2026 Jan 2025 YoY Change
Tata Motors 7,852 5,292 48%
JSW MG Motor 4,606 4,527 2%
Mahindra 3,589 739 386%
VinFast 432
Hyundai 326 331 -2%
BMW 312 194 61%
Kia 306 51 500%
BYD 224 338 -34%
Maruti Suzuki 210
Mercedes-Benz 69 104 -34%
Stellantis 41 274 -85%
Tesla 37
Volvo 35 29 21%
Rolls-Royce 2 4 -50%
Porsche 1 6 -83%
Total 18,042 11,909 51%

Table Source: Auto Punditz

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை தான் கடந்த 2026 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த முதல் 4 நிறுவனங்களாகும். இவற்றிற்கு அடுத்து, ஹூண்டாய் (Hyundai), பி.எம்.டபிள்யூ (BMW), கியா (Kia), பி.ஒய்.டி (BYD) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் புதியதாக களமிறங்கியுள்ள இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) கடந்த மாதத்தில் 210 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து தனது கணக்கை துவங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 17:21 [IST]
English summary
Indias electric car brands 2026 january sales numbers tata motors and jsw mg motor top on list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X