வெளிநாட்டு கார் நிறுவனங்களை அடித்து ஓட விட்ட இந்தியாவின் டாடா & மஹிந்திரா! டெஸ்லா லிஸ்டிலேயே இல்ல!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 ஆயிரத்து 712 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த கடந்த மார்ச் மாதத்தில் 22 ஆயிரத்து 315 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தவற்றை காட்டிலும் பாதிக்கு மேல் கூடுதலாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வழக்கம்போல், கடந்த 2026 மார்ச் மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனை பற்றி பின்னர் பார்ப்போம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் 8 ஆயிரத்து 253 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

most electric cars selling brands

அதுவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் 5,947 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், பிப்ரவரியை காட்டிலும் மார்ச் மாதத்தில் 2,306 எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் கூடுதலாக விற்பனை செய்துள்ளது. கடந்த மாத மொத்த எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் ஏறக்குறைய 37 சதவீத பங்கை கொண்டுள்ளன.

அதாவது, கடந்த மாதத்தில் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களில் மூன்றில் ஒன்று டாடா எலெக்ட்ரிக் கார் ஆகும். டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பதில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறினோம் அல்லவா... அது என்னவென்றால், வழக்கமாக இந்த வரிசையில் 2வது இடத்தை ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் பிடிக்கும்; ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் மஹிந்திரா (Mahindra) பிடித்துள்ளது.

most electric cars selling brands

எம்ஜி மோட்டார் பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் 5 ஆயிரத்து 141 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், மஹிந்திராவில் இருந்து சற்று கூடுதலாக 5 ஆயிரத்து 244 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் 3 ஆயிரத்து 556 எம்ஜி எலெக்ட்ரிக் கார்களும், மஹிந்திராவில் இருந்து 3,174 எலெக்ட்ரிக் கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதேபோன்று, இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை பிடித்துள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கவனத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 223 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மாருதி சுஸுகி கடந்த மார்ச் மாதத்தில் 949 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது.

Brand March 2026 Sales Feb 2026 Sales
Tata Motors 8,253 5,947
Mahindra 5,244 3,174
MG 5,141 3,556
Maruti Suzuki 949 223
VinFast 691 415
Hyundai 476 329
Kia 458 303
BMW 437 260
BYD 414 335
Mercedes-Benz 97 70
Tesla 49 29
Stellantis 30 14
Others 76 57
Total 22,315 14,712

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 415 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்த வின்ஃபாஸ்ட் கடந்த மாதத்தில் 691 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த வரிசையில் 5வது மற்றும் 6வது இடங்களில் தென்கொரிய கார் நிறுவனங்களான ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) உள்ளன.

ஹூண்டாய் கடந்த மாதத்தில் 476 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், கியா 458 எலெக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது. ஆனால், இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் 329 மற்றும் 303 என்கிற அளவில்தான் இருந்தன. இந்த லிஸ்ட்டில் 8வது மற்றும் 9வது இடங்களில் பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் பி.ஒய்.டி (BYD) நிறுவனங்கள் முறையே 437 மற்றும் 414 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் கார்கள் மூலம் கஸ்டமர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்த லிஸ்ட்டில் எம்ஜி மோட்டாரை முந்தும் என எதிர்பார்த்தோம். அது கடந்த மார்ச் மாதத்தில் நடந்துள்ளது. இதன்பின் மஹிந்திராவுக்கு ஏறுமுகம் தான் என்பதால், இதன்பின்னர் இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை விட்டு மஹிந்திரா கீழே இறங்காது என்றே கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 21:51 [IST]
English summary
Indias most electric cars selling brands as per march 2026 sales report check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+