வாங்குனா மாருதி கார் மட்டும் தான்... வரிசையா ஸ்விஃப்ட், பலேனோ கார்னு லைன் கட்டி இருக்கு!!

புதிய ஆண்டின் முதல் மாதமான 2026 ஜனவரியில், இந்திய கார் சந்தையில் சில பாரம்பரிய ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல்கள் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதேசமயம், சில கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த மாத விற்பனையில், இந்தியாவில் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் காராக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) முன்னிலையில் உள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2026 ஜனவரியில் 17,806 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் பதிவான 17,081 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில், இது 4% அதிகரிப்பாகும். இது அதன் நிலையான விற்பனையை வெளிக்காட்டுகிறது. மறுப்புறம், இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பலேனோவின் விற்பனை அளவு சுருங்கியுள்ளது.

india s most selling hatchback cars

பலேனோவின் கடந்த மாத உள்நாட்டு விற்பனை 16% சரிந்து 16,782 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு ஜனவரியில் இது 19,965 யூனிட்களாக இருந்தது. இந்த வீழ்ச்சி இருந்தபோதிலும், மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் வரிசையில் பலேனோ ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பலேனோவிற்கு அடுத்து இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் (Wagon R) கடந்த மாதத்தில் மிகக் கடுமையான சரிவைக் கண்டுள்ளது.

இதன் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரியை விட 37% சரிந்து 15,118 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. ஏனெனில், 2025 ஜனவரியில் சுமார் 24,078 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு மாறாக, மாருதி சுஸுகி ஆல்டோ (Alto) 8% வளர்ச்சியைப் பதிவுசெய்து 12,314 யூனிட்கள் விற்பனையை எட்டியுள்ளது. இது விலை குறைவான ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் சீரான தேவையைக் காட்டுவதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.

india s most selling hatchback cars

இவ்வாறு இந்த லிஸ்ட்டில் முதல் 4 இடங்களில் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்கள் இருக்க, ஒருவழியாக 5வது இடத்தில் மாருதி-அல்லாத ஹேட்ச்பேக் கார் உள்ளது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் டியாகோ (Tiago) மற்றும் அல்ட்ராஸ் (Altroz) மூலம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் தனது கணிசமான இருப்பை நிரூபித்துள்ளது.

டாடா டியாகோ 8,349 யூனிட்கள் விற்பனை உடன் வலுவான 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இதேபோல், டாடா அல்ட்ரோஸ் 54% என்கிற பெரிய வளர்ச்சியுடன் 3,135 யூனிட்கள் விற்பனையை எட்டியுள்ளது. இதன் மூலம், டாடா மோட்டார்ஸ் ஹேட்ச்பேக் சந்தையில் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது.

Model Jan 2026 Sales Jan 2025 Sales YoY Change
1. Maruti Suzuki Swift 17,806 17,081 4%
2. Maruti Suzuki Baleno 16,782 19,965 -16%
3. Maruti Suzuki WagonR 15,118 24,078 -37%
4. Maruti Suzuki Alto 12,314 11,352 8%
5. Tata Tiago 8,349 6,807 23%
6. Hyundai Grand i10 Nios 7,710 5,311 45%
7. Hyundai i20 5,677 4,741 20%
8. Tata Altroz 3,135 2,033 54%
9. Toyota Glanza 2,978 3,455 -14%
10. Maruti Suzuki Ignis 1,902 3,780 -50%

Table Source: Auto Punditz

ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்கள் வரிசையும் 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் கடந்த ஜனவரியில் பெற்றுள்ளன. கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) 7,710 யூனிட்கள் விற்பனையை பதிவுசெய்து, கடந்த ஆண்டை விட 45% அதிகமான விற்பனையை பெற்றுள்ளது. அதேபோல், ஹூண்டாய் ஐ20 (i20) 20% வளர்ந்து 5,677 யூனிட்கள் விற்பனையை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 4,741 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. மறுப்புறம், டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) காரின் விற்பனை 14% குறைந்து 2,978 யூனிட்டுகளாக கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளது. மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Iqnis) விற்பனை 50% என்கிற மிகப்பெரிய சரிவைச் சந்தித்து 1,902 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டை ஆக்கிரமித்தாலும், இந்திய கார் சந்தையின் முதுகெலும்பாக ஹேட்ச்பேக் பிரிவு உள்ளது. 2026 ஜனவரியில் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி தொடர்ந்து இந்தப் பிரிவின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. மாருதி ஸ்விஃப்ட் 17,806 யூனிட்களுடன் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் என்ற பட்டத்தைப் பெற்றது. இது அதன் ஸ்போர்ட்டியான தோற்றமும், எரிபொருள் சிக்கனமும் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதைக் காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 5:00 [IST]
English summary
Indias most selling hatchback cars by january 2026 sales report maruti suzuki swift top on list
மேலும்... #hatchback car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+