இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்- 10 கார்களுக்கான டவுன்பேமண்ட், EMI விபரம்!

தீபாவளி பண்டிகைக்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கான டவுன் பேமண்ட், மாதத் தவணை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம். ஹேட்ச்பேக் முதல் எஸ்யூவி வரை பல்வேறு வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விதத்தில் இந்த பட்டியல் அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் பெரும்பாலானோரின் விருப்பமான இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரபலமான 10 கார் மாடல்களின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை அடிப்படையில், முன்பணம் மற்றும் மாதத் தவணை விவரங்களைப் பார்க்கலாம்.

ஜூலை முதல் செப்டம்பர் 2026 வரையிலான விற்பனைத் தரவுகளின் அடிப்படையில் டாடா பன்ச், மாருதி வேகன்ஆர், டிசையர், பலேனோ, ஸ்விஃப்ட், ஃபிரான்க்ஸ், எர்டிகா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில மாடல்களின் விற்பனை எண்ணிக்கையில் மின்சார வேரியண்ட்டுகளும் அடங்கும்.

Top 10 Cars EMI

1. டாடா பன்ச்

இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற காம்பக்ட் எஸ்யூவி மாடல்களில் டாடா பன்ச் முக்கியமானது. அளவில் சிறிய வகையிலான இந்த கார் நகரப் பயணம், குடும்பப் பயன்பாடு மற்றும் உயரமான இருக்கை அமைப்பை விரும்புபவர்கள் இந்தக் காரைப் பரிசீலிக்கலாம். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.75 லட்சம் என எடுத்துக் கொண்டால், 20% முன்பணம் ரூ.1.15 லட்சமாக கட்ட வேண்டி இருக்கும். மீதமுள்ள 80% தொகையான ரூ.4.60 லட்சத்தைக் கடனாகப் பெற்று, 7 ஆண்டுகளுக்கு 9.5% வட்டியில் செலுத்தினால் மாத EMI ரூ.7,500 ஆக இருக்கும்.

Also Read

2. மாருதி வேகன்ஆர்

குடும்பப் பயன்பாட்டுக்கும் நகரத்தில் எளிதாக ஓட்டுவதற்கும் ஏற்ற ஹேட்ச்பேக் காராக மாருதி சுஸுகி வேகன்ஆர் விளங்குகிறது. உயரமான கூரை அமைப்பு, நடைமுறைக்கு ஏற்ற கேபின் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது பரிசீலிக்கக்கூடிய தேர்வாகும். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.99 லட்சம் என எடுத்துக்கொண்டால், 20% முன்பணம் ரூ.1 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.3.99 லட்சத்தை 7 ஆண்டுகள் கடனாகப் பெற்றால் மாத EMI ரூ.6,530 ஆக இருக்கும்.

Maruti Dzire

3. மாருதி டிசையர்

செடான் கார் வாங்க விரும்புபவர்களிடம் மாருதி டிசையர் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பப் பயணங்கள், பின்புற இருக்கை வசதி மற்றும் அன்றாடப் பயன்பாட்டை கருத்தில் கொள்பவர்கள் இந்த மாடலைப் பரிசீலிக்கலாம். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.31 லட்சம் என்று எடுத்துக் கொண்டால், 20% முன்பணம் ரூ.1.26 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.5.05 லட்சத்தைக் கடனாகப் பெற்று, 7 ஆண்டுகள் மற்றும் 9.5% வட்டி என்ற கணக்கில் மாத EMI ரூ.8,250 ஆக இருக்கும்.

Also Read

4. மாருதி பலேனோ

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி பலேனோ முக்கியமான தேர்வாக உள்ளது. விசாலமான கேபின், அன்றாடப் பயணங்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் நகரத்தில் பயன்படுத்துவதற்கான எளிமை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சம் என எடுத்துக்கொண்டால், முன்பணமாக ரூ.1.20 லட்சம் தேவைப்படும். மீதமுள்ள ரூ.4.79 லட்சத்தை 7 ஆண்டுகள் கடனாகப் பெற்றால் மாத EMI ரூ.7,830 ஆக இருக்கும்.

5. மாருதி ஸ்விஃப்ட்

ஸ்போர்ட்டியான தோற்றம், நகரப் போக்குவரத்தில் எளிதாகக் கையாளும் வசதி மற்றும் பிரபலமான ஹேட்ச்பேக் வடிவமைப்பு ஆகியவற்றால் மாருதி ஸ்விஃப்ட் பலரது விருப்பமாக உள்ளது. முதல் கார் வாங்குபவர்களும் சிறிய குடும்பங்களும் இந்த காரை பரிசீலிக்கலாம். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.5.84 லட்சமாக உள்ளது. இதற்கு 20% முன்பணம் ரூ.1.17 லட்சமாகும். மீதமுள்ள ரூ.4.67 லட்சத்தைக் கடனாகப் பெற்று, 7 ஆண்டுகள் செலுத்தினால் மாத EMI ரூ.7,636 ஆக இருக்கும்.

Maruti Fronx

6. மாருதி ஃபிரான்க்ஸ்

எஸ்யூவி போன்ற தோற்றத்துடன் கூடிய க்ராஸ்ஓவர் காரை விரும்புபவர்கள் மாருதி ஃபிரான்க்ஸ் மாடலைப் பரிசீலிக்கலாம். இதன் வடிவமைப்பு மற்றும் கேபின் வசதிகள் நகரப் பயன்பாட்டுக்கும் குடும்பப் பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளன. சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.85 லட்சம் என எடுத்துக்கொண்டால், முன்பணம் ரூ.1.37 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.5.48 லட்சத்தை 7 ஆண்டுகள் கடனாகப் பெற்று, ஆண்டுக்கு 9.5% வட்டியில் செலுத்தினால் மாத EMI சுமார் ரூ.8,960 ஆக இருக்கும்.

7. மாருதி எர்டிகா

அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தினருக்கு ஏழு இருக்கைகள் கொண்ட காரை வாங்க விரும்புவோருக்கு மாருதி எர்டிகா சிறந்த தேர்வாக உள்ளது. குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிப்பவர்கள், கூடுதல் இருக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு சிறந்த மாடலாக கூறலாம். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.90 லட்சம் என எடுத்துக் கொண்டால், 20% முன்பணம் ரூ.1.78 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.7.12 லட்சத்தைக் கடனாகப் பெற்று 7 ஆண்டுகள் செலுத்தினால் மாத EMI சுமார் ரூ.11,640 ஆக இருக்கும்.

Tata Nexon

8. டாடா நெக்ஸான்

காம்பக்ட் எஸ்யூவி பிரிவில் டாடா நெக்ஸான் முக்கியமான மாடலாக உள்ளது. குடும்பப் பயன்பாடு, உயரமான இருக்கை அமைப்பு மற்றும் பல்வேறு எஞ்சின் தேர்வுகளை விரும்புபவர்கள் இதைப் பரிசீலிக்கலாம். சென்னையில் பெட்ரோல் நெக்ஸான் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.7.40 லட்சம் என எடுத்துக்கொண்டால், முன்பணம் ரூ.1.48 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.5.92 லட்சத்தை 7 ஆண்டுகள் கடனாகப் பெற்று, 9.5% வட்டியில் செலுத்தினால் மாத EMI சுமார் ரூ.9,675 ஆக இருக்கும்.

9. ஹூண்டாய் கிரெட்டா

நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. குடும்பப் பயணங்கள், கேபின் வசதிகள் மற்றும் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளை எதிர்பார்ப்பவர்கள் இந்தக் காரைப் பரிசீலிக்கலாம். சென்னையில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.91 லட்சம் எனக் கணக்கிட்டால், 20% முன்பணம் ரூ.2.18 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.8.73 லட்சத்தைக் கடனாகப் பெற்று 7 ஆண்டுகள் செலுத்தினால் மாத EMI சுமார் ரூ.14,260 ஆக இருக்கும்.

10. மஹிந்திரா ஸ்கார்பியோ

பெரிய எஸ்யூவி வாங்க விரும்புபவர்களிடம் மஹிந்திரா ஸ்கார்பியோ வரிசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய மாடல்கள் வெவ்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைரூ.13.49 லட்சம் என எடுத்துக்கொண்டால், முன்பணம் ரூ.2.70 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.10.79 லட்சத்தைக் கடனாகப் பெற்று, 7 ஆண்டுகள் செலுத்தினால் மாத EMI சுமார் ரூ.17,620 ஆக இருக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள EMI தொகைகள் கணக்கீடுகள் தோராயமாகவும், பெரும்பாலானோருக்கு பயன்படும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 20% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள 80% தொகையை 7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 9.5% வட்டியில் கடனாகப் பெறுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை ஆன்-ரோடு விலையில் சாலை வரி, காப்பீடு மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படுவதால் உண்மையான கடன் தொகையும், மாதத் தவணையும் மாறலாம்.

தீபாவளிக்கு முன்பு கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் ஷோரூமில் இறுதி ஆன்-ரோடு விலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வங்கியின் வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், கடன் காலம் மற்றும் பண்டிகைக் காலச் சலுகைகளை ஒப்பிட்ட பிறகே முன்பதிவு செய்வது நல்லது. குறைந்த மாதத் தவணை மட்டுமின்றி, மொத்த வட்டிச் செலவும் உங்கள் வருமானத்துக்கு ஏற்றதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

Article Published On: Wednesday, October 28, 2026, 14:47 [IST]
English summary
Indias top 10 best selling cars india chennai price down payment emi 2026
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X