இப்போ இந்த டொயோட்டா எம்பிவிக்கு தான் மவுசு.. ஏன் இந்தக் காரை மக்கள் வாங்கிக் குவிக்குறாங்க தெரியுமா?
டொயோட்டா என்ற பெயர் சொல்லியவுடன் அனைவரது மனதிலும் தோன்று ஒரு கார் மாடல் என்றால் இன்னோவா தான். நல்ல இடவசதி கொண்ட ப்ரீமியமான எம்பிவி காராக இன்னோவாவை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் கூட இடம் பெறும் ஒரு கார் மாடலாக டொயோட்டாவின் இன்னோவா இருந்து வருகிறது.
இந்த 7/8 சீட்டர் எம்பிவி காரை இரண்டு வடிவில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. ஒன்று இன்னோவா கிரிஸ்டா மற்றொன்று இன்னோவா ஹைகிராஸ். இரண்டு இரண்டு வடிவங்களும் சேர்த்து இன்னோவாவை டொயோட்டாவின் லைன்-அப்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக மாற்றியிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சுமார் 30,159 கார்களை விற்பனை செய்துள்ளது டொயோட்டா. அதில் 32 சதவீதம் இன்னோவா எம்பிவி தான். அதானது இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்யும் மூன்று கார்களில் ஒன்று இன்னோவா என்று கூறலாம். இதில் இன்னோவா ஹைகிராஸ் மாடலே அதிகமாக 5,602 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. தொடர்ந்து இன்னோவா கிரிஸ்டா மாடலானது 4,028 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஹைகிராஸ் மற்றும் கிரிஸ்டா ஆகிய இரண்டு இன்னோவா கார்களின் விற்பனையும் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. ஹைகிராஸ் மாடலின் விற்பனையானது 24.66 சதவீதம் வரை கடந்த ஏப்ரல் மாதம் உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தக் கார் 4,494 யூனிட்டுகளே விற்பனையாகியிருந்தது. அதேபோல் கிரிஸ்டா மாடலானது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3,205 யூனிட்டுகளே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 25.68 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

சரி இந்த இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையே என்ன வேறுபாடு? இன்னோவா ஹைகிராஸ் என்பது தனிநபர் பயன்பாட்டை மையப்படுத்தி அதற்கேற்ப ப்ரீமியமான அம்சங்கள் மற்றும் டிசைன் வேறுபாடுகளுடன் உருவாக்கப்பட்ட எம்பிவி காராகும். இந்தக் காரானது பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களுடன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னோவா கிரிஸ்டா கார் மாடலானது டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாக்ஸி பயன்பாடு உள்ளிட்ட வணிக நோக்கம் கொண்ட பயன்பாடுகளுக்காக வாடிக்கையாளர்கள் இந்தக் காரை அதிகம் வாங்குகிறார்கள். இதனால் அதற்கேற்ற வகையில் குறைவான விலையையும், குறைவான ப்ரீமியம் வசதிகளையும் கொண்ட காராக இருக்கிறது இன்னோவா கிரிஸ்டா எம்பிவி கார்.
இன்னோவா கிரிஸ்டா காரை 19.18 லட்சம் ரூபாய் முதல் 25.98 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இன்னோவா ஹைகிராஸ் எம்பிவியானது 19.53 லட்சம் ரூபாய் முதல் 31.84 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னோவா எம்பிவி கார்கள் அதிகம் விற்பனையாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக பிரச்சினையில்லாத பயன்பாட்டைக் கொடுத்து வாடிக்கையாளர்களின் மனதில் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது இந்த ப்ரீமியம் எம்பிவி. 20 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இவ்வளவு விற்பனையைக் கொண்டிருக்கும் ஒரு கார் என்றால் அது டொயோட்டாவின் இன்னோவா ஆகத் தான் இருக்க முடியும்.
தரமான பில்ட் குவாலிட்டி, அதிக ரீசேல் வேல்யூ, சிறப்பான ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ், வேறு எந்தக் காரும் கொடுக்க முடியாத அளவு இடவசதி எனப் பல்வேறு காரணங்களினால் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ப்ரீமியம் எம்பிவிக்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா இருந்து வருகிறது. குறிப்பாக இந்தக் காரின் மூன்றாம் வரிசை இருக்கைகளிலும் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி அமரலாம் என்பது இதன் முக்கியமான பிளஸ் பாயிண்ட்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications