கார் வாங்குவதை விட இந்த மாதிரி பிக்-அப் டிரக் ரொம்ப பெஸ்ட்டு! 5 பேர் வரையில் அமர்ந்து போகலாம்!

இசுசூ மோட்டார்ஸ் இந்தியா (Isuzu Motors India) நிறுவனம், அதன் டி-மேக்ஸ் வி-கிராஸ் (D-Max V-Cross) பிக்-அப் டிரக்கை 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் (Upgrade) செய்து இந்தியாவில் பெரியதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.25.5 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இசுசூ பிக்-அப் டிரக் வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய இசுசூ டி-மேக்ஸ் வி-கிராஸ், புதுப்பிக்கப்பட்ட ஸ்டைல், மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் 4x4 பவர்டிரெய்ன் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இசுசூ பிக்-அப் டிரக்கில் முன்பு 4x2 பவர்டிரெயின் ஆப்ஷனும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடலில் 4x2 பவர்டிரெயின் ஆப்ஷன் நீக்கப்பட்டு 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் மட்டுமே தொடரப்பட்டுள்ளது.

2026 isuzu d-max v-cross pick-up truck launched

இந்த இசுசூ பிக்-அப் டிரக்கிற்கு போட்டியாக விற்பனையில் டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் டிரக் உள்ளது. புதிய அப்டேட்டின் காரணமாக, டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்-அப் டிரக்கின் அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ.1.23 லட்சம் அதிகரித்துள்ளது. முன்பு மலிவான 4x2 வேரியன்ட் இப்போது கிடைக்காததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்-அப் டிரக்கின் டாப் வேரியன்ட்டான இசட் பிரஸ்டீஜ் பிரீமியம் 4x4 ஆட்டோமேட்டிக்-இன் விலை ரூ.63,000 உயர்ந்துள்ளது. புதிய 2026 டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனத்தின் வெளிப்புற வடிவமைப்பைப் பொறுத்தவரை, இசட் பிரஸ்டீஜ் வேரியன்ட் கருப்பு நிற கிரில் சரவுண்ட்களைப் பெற்றுள்ளது. மேலும், வாகனத்தின் முன்பக்கத்தில் ஃபாக் விளக்குகளை சுற்றியுள்ள பகுதிகள் இப்போது வாகனத்தின் உடல் நிறத்தில் உள்ளன.

2026 isuzu d-max v-cross pick-up truck launched

பம்பரில் உள்ள பழைய கருப்பு நிற கிளாடிங் மற்றும் வெள்ளி நிறத்திலான பெரிய ஸ்கிட் பிளேட்டிற்கு பதிலாக, மென்மையான பாடி நிற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில், வீல் ஆர்ச்சுகளின் கிளாடிங்கை இசுசூ நிறுவனம் நீக்கியுள்ளது. இசட் பிரஸ்டீஜ் வேரியன்ட், புதிய 18-இன்ச் 12-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களையும், இசட் ஸ்டாண்டர்ட் 16-இன்ச் இரும்பு சக்கரங்களையும் பெற்றுள்ளன.

வாகனத்தின் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற ரியர்வியூ மிரர்களில் மெல்லிய எல்இடி பிளிங்கர்கள் உள்ளன. பின்பக்க பம்பரின் குரோம் வேரியண்ட்டிற்குப் பதிலாக பளபளப்பான கருப்பு நிற பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் தோற்றத்தை மேலும் நவீனமயமாக்குகிறது. உட்புறத்தில், 2026 டி-மேக்ஸ் வி-கிராஸ் இசட் பிரஸ்டீஜ் வேரியன்ட் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2026 isuzu d-max v-cross pick-up truck launched

இது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய பெரிய 10.3-இன்ச் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் 8 ஸ்பீக்கர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், கதவு லைனர்கள் மற்றும் டேஷ்போர்டில் அடர் பழுப்பு நிற லெதரெட் ட்ரிம் சேர்க்கப்பட்டுள்ளது, இது கேபினின் பிரீமியம் உணர்வை மேம்படுத்தியுள்ளது.

என்ஜினைப் பொறுத்தவரை, புதிய டி-மேக்ஸ் வி-கிராஸ் அதே 1.9 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 163 குதிரையாற்றல் மற்றும் 360 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் பெறலாம்.

2026ஆம் ஆண்டு அப்டேட்டில், இசுசூ நிறுவனம் அனைத்து டி-மேக்ஸ் வி-கிராஸ் வேரியன்ட்களிலும் ஆட்டோ-லாக்கிங் டிஃபரன்ஷியலை புதியதாக சேர்த்துள்ளது. இந்த அம்சம் பிக்-அப் டிரக்கின் ஆஃப்-ரோடு திறன்களை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்ற, செயல்திறன் மிக்க லைஃப்ஸ்டைல் வாகனமாக டி-மேக்ஸ் வி-கிராஸ் தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026 டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனத்தில் முக்கியமான மாற்றமாக இப்போது அனைத்து வேரியன்ட்களிலும் இந்த வாகனம் 4x4 டிரைவ்டிரெய்ன் உடன் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இது இந்த பிக்-அப் டிரக் வாகனத்தை வாங்க வரும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் என கருதுகிறோம். ஏனெனில், குறைந்த செலவில் 4x2 டிரைவ்டிரெய்ன் உடன் இந்த வாகனத்தை வாங்குவதற்கு என தனி கூட்டம் இருந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2026, 17:54 [IST]
English summary
Isuzu india launches new 2026 d max v cross pick up truck price features all details here
மேலும்... #isuzu #pick up truck #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X