ஜப்பான் கம்பெனி காரன் மொத்த திறமையையும் காட்டி இருக்கான்! 21 லட்ச ரூபாயில் கார் + பிக்-அப் ட்ரக்!!

ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான இசுஸு (Isuzu), தனது புதுப்பிக்கப்பட்ட 2026 இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டர் (D-Max Hi Lander) வாகனத்தை இந்திய சந்தையில் ரூ.21.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய பிக்கப் டிரக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசுஸு நிறுவனத்தின் பிக்-அப் டிரக் வரிசையில், குறைந்த விலையிலான டி-மேக்ஸ் பிரிவிற்கும், ஆடம்பர வி-கிராஸ் (V-Cross) மாடலுக்கும் இடையில் ஹை-லேண்டர் அமைந்துள்ளது. இதில், டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனமும் சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்டு மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

2026 isuzu d-max hi-lander pick-up truck

அதேநேரம், டி-மேக்ஸ் ஹை-லேண்டர் ஆனது தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது. 2026 இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அப்கிரேட் என்னவென்றால், தற்போதைய டீசல் என்ஜின் உடன் டார்க்-கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகும். முன்பு, இந்த டீசல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைத்தது.

இந்த பிக்-அப் டிரக், 1.9 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-டீசல் என்ஜினை பயன்படுத்துகிறது. இது அதிகப்பட்சமாக 160 எச்பி ஆற்றலையும், 360 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்து பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது. புதிய கியர்பாக்ஸ் உடன், புதுப்பிக்கப்பட்ட டி-மேக்ஸ் ஹை-லேண்டர் க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய கூடுதல் வசதிகளையும் பெற்றுள்ளது.

2026 isuzu d-max hi-lander pick-up truck

வாகனத்தின் மற்ற சிறப்பம்சங்களாக பவர் விண்டோஸ், மேனுவல் ஏர் கண்டிஷனிங் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை 2026 இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரில் சேர்க்கப்பட்டுள்ளன. டி-மேக்ஸ் ஹை-லேண்டர் டபுள்-கேப் பாடி ஸ்டைல் மற்றும் பின்புறத்தில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான படுக்கை வசதியுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இந்த பிக்-அப் டிரக் வாகனத்தின் நிமிர்ந்த வடிவமைப்பில் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் கருப்பாக்கப்பட்ட வெளிப்புற ஹைலைட்கள் ஆகியவை மாறாமல் உள்ளன. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரைக்கும் வாகனத்தின் அடிப்பகுதிக்கும் இடையேயான தூரம்) மற்றும் லேடர்-பிரேம் சேசிஸ் ஆகியவை சுமைகளை ஏற்றிச் செல்லவும், கரடுமுரடான சாலைகளில் பயணிக்கவும் வாகனத்திற்கு திறன்களை வழங்குகின்றன.

2026 இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் ஏபிஎஸ் (ABS), பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை அடங்கும். ஆயுள் மற்றும் மோதல் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட உயர் வலிமை கொண்ட சேசிஸையும் இந்த பிக்-அப் டிரக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இசுஸு வி-கிராஸ் மாடலுக்கு ஒரு மலிவு விலையிலான மாற்றாக 2026 இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டர் திகழ்கிறது. அதேநேரம் இது விலை குறைவான சாதாரணமான டி-மேக்ஸ் வாகனத்தை விட அதிக வசதியையும், பயன்பாட்டையும் வழங்குகிறது. அதிக விலை கொண்ட ஃபோர்-வீல்-டிரைவ் வாகனமாக இல்லாமல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பிக்-அப் டிரக்கை விரும்புபவர்களுக்கு டி-மேக்ஸ் ஹை-லேண்டர் ஏற்றதாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்தை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 25, 2026, 10:31 [IST]
English summary
Isuzu launches 2026 d max hi lander pick up truck in india price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+