முன்தொகை எதுவும் கிடையாது... மாதம் ரூ.38,999 செலுத்தினால் வாகனம் உங்களது கையில்!!

இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனத்தை புதியதாக குத்தகை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிக்-அப் டிரக் வாகனத்தை எளிதாக சொந்தமாக்கி வணிகம் மற்றும் கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு இந்த புதிய குத்தகை முறை வழிவகுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிக்-அப் டிரக் மாடல்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். அத்தகைய பிக்-அப் டிரக் வாகனங்களுள் ஒன்று, இசுஸு நிறுவனத்தின் டி-மேக்ஸ் ஆகும். கமர்ஷியல் பயன்பாடுகளுக்கான டி-மேக்ஸ் ஆனது 'டி-மேக்ஸ் எஸ்-கேப்' என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனம் தான் தற்போது குத்தகை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

leasing solution for isuzu d-max s-cab

தரமான மற்றும் பவர்ஃபுல்லான பிக்-அப் டிரக் வாகனமாக இருப்பினும், அதற்கேற்ப விலைமிக்கதாக இசுஸு டி-மேக்ஸ் விளங்குகிறது. இதனால், சற்று வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த பிக்-அப் டிரக் வாகனத்தை வாங்க முடியும் நிலையில், அதனை கடந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்த புதிய குத்தகை முறையை இசுஸு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, நிலையான 4 வருடங்களுக்கு இந்த வாகனத்தை குத்தகைக்கு எடுத்தால் மாதந்திர வாடகை கட்டணங்கள் ரூ.38,999-இல் இருந்து துவங்குகின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் எந்தவொரு முன்தொகையையும் செலுத்தாமல் குத்தகை முறையில் டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனத்தை பெற முடியும்.

leasing solution for isuzu d-max s-cab

அதுமட்டுமின்றி, கூடுதல் சேவைகள், இன்ஸ்சூரன்ஸ் மற்றும் RTO பதிவு கட்டணம் என எதற்கும் பணம் செலுத்த தேவையில்லை. இந்த குத்தகை முறை மூலமாக அதிகப்பட்சமாக ரூ.1.81 லட்சம் வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்கிறது இசுஸு நிறுவனம். ஏரோடைனமிக் டிசைனில், அதி வலிமைமிக்க இரும்பு உடல் அமைப்பில் டி-மேக்ஸ் பிக்-அப் டிரக் வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.

பல வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் பெரிய கார்கோ படுக்கை ஆனது கனரக கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு இந்த இசுஸு வாகனத்தை ஏற்றதாக விளங்க வைக்கிறது. இந்த பிக்-அப் டிரக் வாகனத்தில் 2.5 லிட்டர் VGT இண்டர்கூல்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 3,800 ஆர்பிஎம்-இல் 77.77 பிஎச்பி மற்றும் 1,500- 2,400 ஆர்பிஎம்-இல் 176 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. வாகனத்தின் கேபினுக்குள் டிரைவர் இருக்கை ஆனது 6 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடியதாக உள்ளது.

பிக்-அப் டிரக் வாகனமாக இருப்பினும், டி-மேக்ஸ் எஸ்-கேபில் இரு வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இதில் இரண்டாவது வரிசை இருக்கைகளை தேவைக்கேற்ப சாய்த்துக் கொள்ளலாம். மேலும், ஏசி சிஸ்டத்தில் தூசி & துகள் வடிக்கட்டியும், வாகனத்திற்குள் பல இடங்களில் ஸ்டோரேஜ் பகுதிகளும் உள்ளன. டிரைவருக்கு எதிரே வழங்கப்படும் டிஸ்பிளே ஆனது பல்வேறு விதமான விபரங்களை வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்றுமதி & இறக்குமதி தொழிலில் இருப்பவர்களில் பலரது விருப்பமாக இசுஸு டி-மேக்ஸ் உள்ளது. ஆனால், இந்த பிக்-அப் டிரக் வாகனத்தின் அதிகப்படியான விலையால் பலரால் அவர்களது விருப்பத்தை நிஜமாக்க முடியவில்லை. இதனை மனதில் வைத்தே, குத்தகை முறையில் இந்த வாகனத்தை பயன்படுத்தும் வசதியை இசுஸு அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் இசுஸு நிறுவனம் என இருவருக்கும் பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது.

Article Published On: Wednesday, May 20, 2026, 23:50 [IST]
English summary
Isuzu motors introduced leasing solution for d max s cab pick up truck in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+