உலகமே தமிழ்நாட்டு காரை தான் வாங்க போகுது! இந்த காரை இங்க தயாரிக்கப்போறாங்களா?
ஜாக்குவார் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் பிரபலமான காரான ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் தாரிப்பை தமிழகத்தில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது முதல் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை டாடா நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கடந்த 2024ல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கம் என்ற பகுதியில் ஆலை அமைத்து வாகனங்களைதயாரித்து வருகிறது. இது சாதாரணமான ஆலை மட்டும் இல்லை இங்கு டாடா மற்றும் ஜாக்குவார் நிறுவத்தின் உயர் ரக சொகு வாகனங்கள் எல்லாம் தயாரிக்கப்படுவுகிறது. இது இந்தியாவின் தெற்கு ஆட்டோமோட்டிவ் காரிடாராகவே செயல்படுகிறது.

தற்போது உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து வாகனங்களை உருவாக்குகள் பணிகளை டாடா நிறுவனம் புனே ஆலையில் தான் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில்உள்ள ஆலையில் தயாரிப்பு லைனை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது இதன் மூலம் அதிக வாகனங்களை தயாரிக்கவும் காத்திருப்பு காலத்தை குறைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய தயாரிப்பு லைனில் ஆண்டிற்கு 2.5 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடியும். இத்தனை வாகனங்கள் தயாரிக்கப்பட்டால் சொகுசு கார்களின் மார்கெட்டே இந்தியாவில் விரிவடைய வாய்ப்புள்ளது. இது மட்டுமல்ல இங்கு தயாரிக்கப்படும் கார்களை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜாக்குவார் நிறுவனத்தில் அதிகம் விற்பனையாவது லேண்ட்ரோவர் எவோக் கார்தான். இந்த கார் தற்போது புனேவில் தயாரிக்கப்படும் நிலையில் வரும் 9ம் தேதி முதல் இது தமிழ்நாட்டிற்கு மாற்றப்படுகிறது. இதனால் புனேவில் உள்ள ஆலையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் மற்ற கார்கள் தயாரிக்க முடியும். தமிழ்நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரப்போகும் தயாரிப்பு லைனில் முதலில் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் தான் வரப்போகிறது. இந்த காரின் உதிரி பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வைத்து தயாரிக்கப்படுகிதறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. முக்கியமாக இதன் ஸ்டைலிங், காம்பேக்டான சொகுசு லுக் காருக்கு நல்ல ஃபீலை தருகிறது. இந்த கார் மார்கெட்டில் ஆடி க்யூ5 பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

ஜாக்குவார் நிறுவனத்தில் அதிகம் விற்பனையாவது லேண்ட்ரோவர் எவோக் கார்தான். இந்த கார் தற்போது புனேவில் தயாரிக்கப்படும் நிலையில் வரும் 9ம் தேதி முதல் இது தமிழ்நாட்டிற்கு மாற்றப்படுகிறது. இதனால் புனேவில் உள்ள ஆலையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் மற்ற கார்கள் தயாரிக்க முடியும். தமிழ்நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் சொகுசு கார்களில் அதிக மார்கெட் வைத்திருந்த சீனாவில் தற்போது விற்பனை குறைகிறது. அமெரிக்காவில் வரி விதிப்பால் விற்பனை குறைகிறது. இந்த தருணத்தை பயன்படுத்தி இந்த சொகுசு கார்கள் தயாரிப்பை டாடா நிறுவனம் அதிகரித்து பெரிய அளவில் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









