வெறும் 85 யூனிட்டுகள் மட்டுமே... இந்தியாவில் தனித்துவமான ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!!

ஜீப் நிறுவனத்தின் 85 ஆண்டுகால பாரம்பரியத்தையும், நிறைவு விழாவையும் முன்னிட்டு, காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல்வேறு தனித்துவமான அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த மாடல் வெறும் 85 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உயர்நிலை வேரியண்ட்டான மாடல் எஸ் ஆப்ஷன் பேக் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.26.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள ஜீப் டீலர்கள் மற்றும் ஜீப் இந்தியா இணையதளத்தின் மூலமாக இந்த புதிய மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Jeep Compus Special Edition

வெளிப்புற வடிவமைப்பு

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், பிற வேரியண்ட்டுகளில் இருந்து தனித்துவமாக தெரியும் வகையில், கதவுகள், பின்புற கதவு மற்றும் வீல் கேப்புகளில் 85 ஆனிவர்சரி எடிசன் என்ற பிரத்யேக அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 18 அங்குல க்ளாஷ் பினிஷ் செய்யப்பட்ட கருப்பு வண்ண சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முன்புறத்தில் 7 ஸ்லாட் அமைப்புடைய க்ரில், எல்இடி ஹெட்லைட்டுகள், கண் புருவ வடிவிலான பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Jeep Compus

இன்டீரியர்

உட்புறத்தில் முழுமையாக கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மாயன் கோல்டு அக்சென்ட் அலங்கார அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண செயற்கை லெதர் இருக்கைகள், தங்க வண்ணத் தையல் வேலைப்பாடுகள் உட்புறத்தை பிரிமீயமாக மாற்றி உள்ளன. பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிரவும், 85 ஆனிவர்சரி ஏஎக்ஸ்எஸ் ஆக்சஸெரீ பேக் விருப்பத்தின் பேரில் கூடுதலாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் மல்டிஜெட் II டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 170எச்பி பவரையும் மற்றும் 350என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனும் உள்ளது.

Jeep Compus

தனித்துவம்

இந்த ஸ்பெஷல் எடிசன் பேட்ஜில் மொத்தமாக 85 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. எனவே, தனித்துவமான காம்பஸ் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு இது மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும்.

தற்போது விற்பனையில் உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உயர்நிலை வேரியண்ட்டான மாடல் எஸ் ஆப்ஷன் பேக்கிலிருந்து பல தனித்துவமான விஷயங்களுடன் வந்திருந்தாலும், விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் என்று கூறலாம்.

Article Published On: Tuesday, August 18, 2026, 11:02 [IST]
English summary
Jeep compass 85th anniversary edition rs 26 70 lakh
மேலும்... #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X