3 வருஷத்திற்குள் காரை திருப்பி கொடுத்துட்டா 60% பணம் திரும்ப கிடைக்கும்! அதை வைத்து புது காரை வாங்கிடலாம்!

ஜீப் இந்தியா (Jeep India) தனது காம்பஸ் (Compass) மற்றும் மெரிடியன் (Meridian) எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக 'கான்ஃபிடன்ஸ் 7' (Confidence 7) என்ற புதிய நீண்டகால உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ஏழு முக்கிய நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது காரின் மறுவிற்பனை மதிப்பில் 60% வரை உத்தரவாதம் அளிக்கும் உறுதியளிக்கப்பட்ட பை-பேக் (Buy Pack) திட்டம் உட்பட விரிவான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவையாவன,

1. உறுதியளிக்கப்பட்ட பைபேக் திட்டம் (Assured Buyback Program): ஜீப்பின் இந்த 'பணத்தை திரும்ப வழங்கும்' திட்டம் இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் காரை வாங்கிய எக்ஸ்-ஷோரூம் விலையில் 60% வரை திரும்பப் பெறும் வாய்ப்பைப் பெறலாம். அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது குறிப்பிட்ட கிலோமீட்டர் வரம்பு, இந்த இரண்டு காரணிகளின் கலவையின் அடிப்படையில்தான் இந்த திட்டத்திற்கான வாடிக்கையாளர்களின் தகுதியை ஜீப் நிறுவனம் தீர்மானிக்கும்.

jeep india introduces new confidence 7

2. நீண்டகால வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்: ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களுக்கான பராமரிப்பு சேவைகளை மானிய விலையில் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ், ஜீப்பின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) காம்பஸ்ஸிற்கு ஒரு நாளைக்கு ரூ.38 முதல் மற்றும் மெரிடியனுக்கு ஒரு நாளைக்கு ரூ.43 முதல் தொடங்குகிறது.

இந்த AMC-இன் அதிகபட்ச காலம் ஏழு ஆண்டுகள் ஆகும். அதுவே, வழக்கமான கார் பராமரிப்பு ஒப்பந்தம் ஆனது ஐந்து ஆண்டுகள் அல்லது 75,000 கி.மீ வரை மட்டுமே என்பதை இங்கே நினைவில் கொள்ளவும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காருக்கான பாகங்கள் மற்றும் பணியாளர் கட்டணங்களில் 33% வரை சேமிப்பு தள்ளுபடி வழங்கப்படும்.

jeep india introduces new confidence 7

3. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Extended Warranty): ஜீப்பின் இந்த புதிய உரிமையாளர் திட்டம், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி கவரேஜை வழங்குகிறது. மேலும், உரிமையாளர் இந்த கால அவகாசம் முடிவதற்குள் தனது காரை விற்க விரும்பினால், மீதமுள்ள வாரண்டியை அடுத்த உரிமையாளருக்கு மாற்ற முடியும். இது நன்கு பராமரிக்கப்பட்ட கார்களின் மறுவிற்பனை மதிப்பை கணிசமாக அதிகரிக்கும்.

4. ஸ்பேர் வாகனம் (Courtesy Edge): வாடிக்கையாளரின் ஜீப் காம்பஸ் அல்லது மெரிடியன் கார் ஆனது சேவை அல்லது விபத்து அல்லாத பழுதுபார்க்கும் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஜீப் மையத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு ஒரு மாற்று வாகனம் (loaner vehicle) வழங்கப்படும். இல்லையெனில், சேவை மையத்தில் இருந்து வாகனத்தை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்ய, உரிமையாளருக்கு கேப் (cab) சேவை ஏற்பாடு செய்யப்படும்.

jeep india introduces new confidence 7

5. சாலைப் பயண உதவி (Roadside Assistance): ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களை வாங்குபவர்களுக்கு அவர்களின் புதிய வாகன வாங்குதலுடன் ஏழு ஆண்டுகளுக்கு இலவச சாலைப் பயண உதவி (RSA) கவரேஜும் கிடைக்கும். அதாவது, பயணத்தின் போது கார் எங்கேனும் பழுதாகி நின்றாலோ அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ காரை அது இருக்கும் இடத்திற்கே வந்து சரி செய்து கொடுக்க 24/7 நேரமும் உதவி கிடைக்கும்.

6. முன்னுரிமை சலுகைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சேவை (Priority Privileges and Express Service): 'ஜீப் கான்ஃபிடன்ஸ் 7' திட்டத்தின் ஒரு பகுதியாக காம்பஸ் மற்றும் மெரிடியன் கார் உரிமையாளர்களுக்கு எக்ஸ்பிரஸ் சேவைக்கு தகுதி உண்டு. இதில் சம்பந்தப்பட்ட வேலைப்பார்ப்பிற்கான வகையைப் பொறுத்து, சேவை மையமானது வாகனத்தை குறைந்தபட்சம் 90 நிமிடங்களிலும், அதிகபட்சம் 180 நிமிடங்களிலும் பழுதை சரிச்செய்து உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்க உத்தேசித்துள்ளது.

jeep india introduces new confidence 7

7. ஜீப் லைஃப்ஸ்டைல் ​​மெர்ச்சண்டைஸ் வவுச்சர் (Jeep Lifestyle Merchandise Voucher): 'கான்ஃபிடன்ஸ் 7' திட்டத்தில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 மதிப்புள்ள ஜீப் லைஃப்ஸ்டைல் ​​வவுச்சர் வழங்கப்படும். இதைக்கொண்டு 'ஜீப் கியர் ஸ்டோர்' (Gear Store)-இல் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 'கான்ஃபிடன்ஸ் 7' திட்டம் வாடிக்கையாளர்களின் வெளிப்படைத்தன்மை, நீண்டகால மதிப்பு மற்றும் சேவை வசதி தொடர்பான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாங்கும் ஜீப் காருடன் சேர்த்து இந்த திட்டத்தை பெறுவதற்கான கட்டணம் காம்பஸ் காருக்கு ரூ.41,926 ஆகவும், மெரிடியன் காருக்கு ரூ.47,024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், ரேங்லர் (Wrangler) மற்றும் கிராண்ட் செரோக்கி (Grand Cherokee) போன்ற விலையுயர்ந்த ஜீப் கார் மாடல்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, January 18, 2026, 5:00 [IST]
English summary
Jeep india introduces new confidence 7 long term ownership program for compass and meridian
மேலும்... #jeep #jeep compass #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X