7 பேர் போகக்கூடிய கார் என்றதுனாலேயே இவ்வளவு விலையா? மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்ல!!

அமெரிக்க எஸ்யூவி (SUV) கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் (Jeep), அதன் மூன்று வரிசை கொண்ட எஸ்யூவி கார் மாடலான மெரிடியனின் புதிய சிறப்புப் பதிப்பான 'மெரிடியன் டிராக் எடிசன்' (Meridian Track Edition)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியண்ட், மெரிடியனின் உயர்தர ஓவர்லாண்ட் (Overland) வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது.

இதன் ஆரம்ப விலை, 4x2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.35.95 லட்சம் ஆகவும், 4x4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.37.82 லட்சம் ஆகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெரிடியன் டிராக் எடிஷன், அதன் வழக்கமான மெரிடியன் காரில் இருந்து வேறுபடும் வகையில் பல வெளிப்புற மேம்பாடுகளுடன் வருகிறது.

jeep meridian track edition india launch

காரின் வெளிப்புறத்தில் கிரில், வெளிப்புற பேட்ஜ்கள் மற்றும் பாடி மோல்டிங்குகளில் பியானோ கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடர் எஸ்பிரெஸ்ஸோ நிற கிரில்லில் நியூட்ரல் கிரே ஹைலைட்ஸ் தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன. இது 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களுடன் வந்துள்ளது. மேலும், இது ஒரு ஸ்பெஷல் எடிசன் கார் என்பதை குறிக்கும் விதமாக சிறப்பான 'டிராக் எடிஷன்' ஹூட் டீக்கால் மற்றும் பிரத்யேக பேட்ஜிங்கும் கொண்டுள்ளது.

உட்புறத்தில், இந்த டிராக் எடிஷன் புதிய டூயல்-டோன் 'டியூபெலோ' இன்டீரியர் தீம் மற்றும் மெல்லிய ஸ்வெட் இன்செர்ட்களைக் கொண்டுள்ளது. இது வழக்கமான வேரியண்ட்டின் கேபின் ஃபினிஷுக்கு மாற்றாக அமைகிறது. ஸ்டீயரிங் சக்கரத்தில் பளிச்சிடும் தையல்களுடன் 'கார்டினா லெதர்' சுற்றப்பட்டுள்ளது. ஜீப் மெரிடியன் டிராக் எடிஷனில் உள்ள முக்கிய அம்ச மேம்பாடு, 140மிமீ நகரும் தன்மை கொண்ட இரண்டாம் வரிசை இருக்கையாகும்.

jeep meridian track edition india launch

இது பயணிகளுக்கு அதிக இட வசதியையும், மூன்றாவது வரிசைக்கு எளிதான அணுகலையும் வழங்குகிறது. ஓவர்லாண்ட் வேரியண்ட்டை விட இது ஒரு முக்கிய நடைமுறை மேம்பாடாகும். ஓவர்லாண்ட் வேரியண்ட்டின் தொழில்நுட்ப அம்சங்கள் பெரும்பாலும் மாறாமல் டிராக் எடிஷனில் தொடர்கின்றன. இதில் பவர்டு & வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

காருக்குள் டாஷ்போர்டில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், பனோரமிக் சன்ரூஃப்-பும் மெரிடியன் காரின் இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன. என்ஜினைப் பொறுத்தவரை, மெரிடியன் டிராக் எடிஷன் வழக்கம் போல 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உடன் கிடைக்கும்.

jeep meridian track edition india launch

என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 4x2 மற்றும் 4x4 டிரைவ்டிரெய்ன் அமைப்புகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். இதில் 4x2 டிரைவ் ஆப்ஷனில் ரூ.35.95 லட்சமாகவும், 4x4 டிரைவ் ஆப்ஷனில் ரூ.37.82 லட்சமாகவும் புதிய மெரிடியன் டிராக் எடிஷனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெல்லன்டிஸ் இந்தியா (Stellantis India) நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிராண்டுகளின் வணிகத் தலைவர் மற்றும் இயக்குநர் குமார் பிரியேஷ் கூறுகையில், "டிராக் எடிஷன், எங்கள் பிரீமியம் 7 இருக்கை எஸ்யூவியான மெரிடியனுக்கு செதுக்கப்பட்ட, அதிக வெளிப்படையான தோற்றத்தை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பிய மேம்பட்ட வசதியையும் இது வழங்குகிறது. புதிய நகரும் இரண்டாம் வரிசை இருக்கை மூலம், இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வசதியான ஜீப் மெரிடியனை உருவாக்கியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

jeep meridian track edition india launch

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டிராக் எடிஷன் பதிப்பில் இயந்திர ரீதியாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இருப்பினும், இது ஜீப் மெரிடியனின் விற்பனையை ஓரளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மார்க்கெட்டில் பிரபலமான ஜீப் காம்பஸ் (Compass) காரின் 7-இருக்கை வெர்ஷன் தான் மெரிடியன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 17:10 [IST]
English summary
Jeep india launched meridian track edition check price features all details here
மேலும்... #jeep #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X