யார் அந்த குடுத்து வெச்ச 41 கஸ்டமர்களோ... எவ்வளவு கோடி கோடியாய் பணம் இருந்தாலும் அதன்பின் வாங்க முடியாது!

ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனம் அதன் புதிய 'வ்ராங்லர் வில்லிஸ் 41' (Wrangler Willys 41) என்கிற லிமிடெட் எடிஷன் (Limited Edition) காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் ஜீப் பிராண்டை பிரபலப்படுத்திய 1941 வில்லிஸ் எம்பி (Willys MB) வாகனத்தை நினைவுக்கூறும் விதமாக இந்த சிறப்புப் பதிப்பு வந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் வெளியான முந்தைய வில்லிஸ் 41 ஸ்பெஷல் எடிஷன், ஏழு நாட்களில் இந்தியா முழுவதும் விற்றுத் தீர்ந்தது. இது இந்த காருக்கு வாடிக்கையாளர்களிடையே உள்ள பெரும் வரவேற்பைக் காட்டியதை தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிறப்பு வ்ராங்லர் வாகனம், வெறும் 41 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

jeep wrangler willys 41 limited edition launch

இதன் மூலம், இந்தியாவில் வழங்கப்படும் வ்ராங்லர் கார்களில் இது மிகவும் அரிதான பதிப்பாக அமைகிறது. பிரபலமான வ்ராங்லர் ரூபிகான் (Rubicon) வகையை அடிப்படையாகக் கொண்டுள்ள புதிய வில்லிஸ் 41 பதிப்பு, வழக்கமான வடிவமைப்பு அம்சங்களுடன், சவாலான ஆஃப்-ரோடு பயணங்களுக்குத் தேவையான நவீன உபகரணங்களையும் கொண்டுள்ளது.

புதிய வில்லிஸ் 41 பதிப்பு ஆனது 1941 வில்லிஸ் எம்பி வாகனத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2ஆம் உலக போரின் போது நிரூபிக்கப்பட்ட 1941 வில்லிஸ் எம்பி வாகனத்தின் நீடித்து உழைக்கும் 4x4 திறனை புதிய வில்லிஸ் 41 பதிப்பு பிரதிபலிக்கிறது. இரண்டாம் உலகப்போரை நினைவுக்கூறும் வில்லிஸ் கிராபிக்ஸை கொண்ட இந்த சிறப்பு பதிப்பில் 'ஒன் ஆஃப் 41' என்கிற பேட்ஜ் உள்ளது.

jeep wrangler willys 41 limited edition launch

அதாவது, உற்பத்தி செய்யப்படவுள்ள 41 யூனிட் 'வில்லிஸ் 41' வாகனங்களிலும் அவற்றின் பிரத்யேக எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவ்வாறு தோற்றத்தில் மட்டுமின்றி, புதிய வ்ராங்லர் வில்லிஸ் 41 வாகனத்தில் நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற கூடுதல் சிறப்பம்சங்களும் உள்ளன. மோட்டார் பொருத்தப்பட்ட பக்கவாட்டுப் படிகள் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டாஷ்கேம்) போன்ற பிரீமியம் அம்சங்கள் இதில் அடங்கும்.

அட்வென்ச்சர் பயணங்களை அவ்வப்போது மேற்கொள்பவர்களுக்காக கூடுதல் ஆப்ஷனாக ஒரு துணை கிட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூஃப் கேரியர், பக்கவாட்டு ஏணி மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் ரூஃப்டாப் ஆகியவை அடங்கும். மற்றப்படி, வ்ராங்லர் வில்லிஸ் 41 ஸ்பெஷல் எடிஷன் அதே 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை தான் கொண்டுள்ளது.

jeep wrangler willys 41 limited edition launch

அதிகப்பட்சமாக 270 ஹெச்பி குதிரைத்திறனையும், 400 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு, முழுநேர 4x4 அமைப்புடன் வருகிறது. இது சவாலான நிலப்பரப்புகளிலும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. புதிய வ்ராங்லர் வில்லிஸ் 41 ஆனது வழக்கமான வ்ராங்லர் ரூபிகான் காரை விட ரூ.2,00,000 அதிகமாக ரூ.70.31 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுவே, வழக்கமான வ்ராங்லர் ரூபிகான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.68.31 லட்சம் ஆகும். மேலும், புதிய சிறப்பு பதிப்பிற்கான பிரத்யேக ஆக்சஸரி கிட் ரூ.3,60,000 விலையில் கிடைக்கிறது. இந்தியா முழுவதற்கும் வெறும் 41 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வில்லிஸ் 41 எடிஷனுக்கான முன்பதிவுகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரம்பரியம், தனித்துவம் மற்றும் அட்வென்ச்சர் பயணங்களுக்கான திறனை கொண்ட வாகனமாக புதிய ஜீப் வ்ராங்லர் வில்லிஸ் 41 கருதப்படுகிறது. இந்த லிமிடெட் எடிஷன் வாகனம், ஜீப் பிராண்டின் பெருமைகளை முன்னிறுத்தி, நவீன வ்ராங்லரின் அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த காரை வெறும் 41 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விரைவாக புக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 24, 2026, 21:34 [IST]
English summary
Jeep india launches new wrangler willys 41 limited edition price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X