அறிமுகத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த ஜீப் ரேங்லர் ரூபிகான் ஒயிட்கேப் எடிஷன்!!

ஜீப் ரேங்லர் ரூபிகான் எஸ்யூவியின் ஒயிட்கேப் எடிஷன் (Jeep Wrangler Rubicon Whitecap Edition) ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 25 கார்களையும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய வடிவமைப்பு, தனித்துவமான தோற்றம் மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு பொருத்தமான இந்த எஸ்யூவிக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பை இருப்பதை இந்த புக்கிங் மூலமாக தெரிய வருகிறது.

இந்த கார் ரூ.73.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த லிமிடேட் எடிசன் ரேங்லர் மாடல்களில் ஒன்றாக வெளியிடப்பட்டது. இந்த தனித்துவமான மாடலை புக்கிங் செய்தவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் வாயிலாகத் தொடங்க ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தனது 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் காலகட்டத்தில் இந்தச் சிறப்புப் பதிப்பு அறிமுகமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeep Wrangler Rubicon Whitecap Edition

ஜீப் ரேங்லர் ரூபிகான் ஒயிட்கேப் எடிஷன் கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்காக மொத்தம் 25 யூனிட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் இந்தக் காரை வாங்கியுள்ள 25 வாடிக்கையாளர்களும் உலகம் முழுவதும் உள்ள 250 ஒயிட்கேப் உரிமையாளர்களைக் கொண்ட பிரத்யேகக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

Also Read

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாடலுக்குக் கிடைத்த வரவேற்பை இது வெளிப்படுத்துகிறது. வழக்கமான ரேங்லர் மாடல்களில் இருந்து வேறுபட்ட தோற்றத்துடன், ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இந்தச் சிறப்புப் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Jeep Wrangler Rubicon Whitecap Edition

இந்தக் காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் வெளிப்புற வடிவமைப்பாகும். பழைய ஜீப் சிஜே-யூனிவர்சல் (Jeep CJ-Universal) மாடலின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் வகையில் ஒயிட்கேப் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தப் பழைய மாடலில் இடம்பெற்றிருந்த வெள்ளை நிற மேற்கூரையின் வடிவமைப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய ஒயிட்கேப் எடிஷனில் பிரகாசமான வெள்ளை நிற ஹார்ட்டாப் மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் முன்பக்கத்தில் உள்ள ஜீப் நிறுவனத்தின் அடையாளமான ஏழு ஸ்லாட்கள் கொண்ட கிரில்லும் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது.

Also Read

மேலும், இந்தச் சிறப்புப் பதிப்பிற்கென பிரத்யேக வெளிப்புற கிராபிக்ஸ் மற்றும் ஒயிட்கேப் அலங்கார அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வழக்கமான ரேங்லர் ரூபிகான் காரிலிருந்து இதனை எளிதாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்தக் கார் மோஜிட்டோ கிரீன் (Mojito Green) நிறத்தில் மட்டுமே கிடைக்கும். பச்சை நிற பாடியுடன் வெள்ளை நிற மேற்கூரை மற்றும் கிரில் இணைக்கப்பட்டிருப்பது இதற்குத் தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.

Jeep Wrangler Rubicon Whitecap Edition

வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ரேங்லர் ரூபிகான் மாடலின் அடிப்படை ஆஃப்-ரோடு அடையாளத்தை ஒயிட்கேப் எடிஷன் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. கரடுமுரடான பாதைகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகளில் பயணிக்கும் திறனுக்காக ஜீப் ரேங்லர் உலகளவில் பிரலபமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 272 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Article Published On: Tuesday, October 13, 2026, 13:42 [IST]
English summary
Jeep wrangler rubicon whitecap edition sold out india
மேலும்... #new launches #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X